search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • தாக்குதல் நடத்திய மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட்டம்.
    • தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வந்தனர்.

    செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரம் அருகே மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு நடந்தது.

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    தாக்குதல் நடத்திய மர்ம நபர் நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக அரசு நடத்தும் தொலைக்காட்சியின் மூலம தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வந்தனர்.

    • இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
    • சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குண்டுவெடி விபத்தில் சந்தீப் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, ரேஞ்சில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் அவருக்கு உடனடியாக மருத்துவ முதல் உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சந்தீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.

    ராணுவ வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்பதாகவும், சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர். அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.

    அதன்பின் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தப்பிச் சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது.
    • தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    அப்போது அங்கு 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது. அவர்கள் துறைமுகத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அங்கிருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறி துடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், இதன்காரணமாக அங்கு கடந்த மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
    • கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என கூறப்படுகிறது.

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
    • இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படி கூறினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

    இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டைச் சேர்ந்த ரஞ்ஜு என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்தார். தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தைக் குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படியும் ரஞ்ஜூ கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.

    தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை ஜெயப்பிரகாஷ் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
    • ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தூத்துக்குடி:

    கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில், கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.

    போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜெயப்பிரகாஷை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணிக்கு இடது கையில் வெட்டு பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
    • தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

    இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார்.

    இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
    • ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.

    இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்காவின் மிசிசிபி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

    • சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

    காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    ×