என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95936"
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 28). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் கம்பெனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை வீரமணி முந்திச் சென்றார்.
இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரமணியை பின்தொடர்ந்து சென்று கல்மண்டபத்தில் வைத்து மறித்து எங்களை எப்படி முந்திச்செல்லலாம்? எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வீரமணியை குத்தினார். காயம் அடைந்த வீரமணி இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விபல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீரமணியை தாக்கியது நெட்டப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும் அவருடன் வந்தது பண்டசோழநல்லூரை சேர்ந்த பார்த்திபன் (27). நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (20) மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பதும் தெரிந்தது.
இதில், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கூனிமேடு குப்பத்தை சேர்ந்தவர் பழனி. மீனவர். இவரது மனைவி அஞ்சனா (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்தனர்.
மூத்த மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் ராஜசங்கர் (வயது 23). மகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே பழனி அப்பகுதியில் சீட்டு பிடித்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் போனது. ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊர் பஞ்சாயத்தார் பழனி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நல்லவாடு உள்ளிட்ட சில மீனவ கிராமங்களுக்கு சென்றபோது அவர்களும் ஊருக்குள் இவர்களை அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து அஞ்சனா தனது மகன் ராஜசங்கருடன் முதலியார்பேட்டை கருமார வீதியில் வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடியேறினார். ராஜசங்கருக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்து வந்தார். அஞ்சனா மீன் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். தான் வேலைக்கு செல்லாமல் தாய் வேலைக்கு செல்வதால் ராஜசங்கர் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா மூத்த மகனுக்கு பெண் பார்க்க பூம்புகார் சென்றிருந்தார். இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீடு பூட்டாமல் மூடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜசங்கர் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அஞ்சனா கதறி அழுதார்.
இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27) கூலி தொழிலாளி. இவருக்கும் வேலூர் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் குடியாத்தத்தில் இன்று நடைபெறும் சிரசு திருவிழாவை காண்பதற்காக தனது தாய் வீட்டுக்கு அனுப்புமாறு பிரியா தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு தமிழரசன் ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்.
இதனால் தம்பதியிடையே தகாராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரியா இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.
அந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார்.
ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.
வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.
பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகிலேயே சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெயவேல் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஜெயவேல் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் நாச்சாத்தாள் (வயது 65) என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் உள்ள இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் மடுகரை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே சாலையோரம் படுத்து தூங்கினார்.
அப்போது சூரமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது. இதில், மினி வேன் சக்கரம் செல்வம் உடல் மீது ஏறி இறங்கியது.
படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து செல்வத்தின் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து நடந்த அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்து போனார். அதன் விவரம் வருமாறு:-
மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் வேங்கடபதி. இவரது மனைவி ஞானாம்பாள் (60). இவர், சம்பவத்தன்று மடுகரை ஏரிக்கரையில் சாலையோரம் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஞானாம்பாள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஞானாம்பாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.
இந்த விபத்து குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா சர்மாவின் தாயார், ‘அனைவரையும்போல் என் மகளும் இதை ‘ஷேர்’ செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரத்தை அவசர வழக்காக அனுமதித்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதைதொடர்ந்து, இந்த ஜாமின் மனுவின் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை:
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 35). இவர் மனைவி பாரூக் பானு. இவர்களுக்கு முகமது இரியாஸ்(8) என்ற மகனும், அஜிகா(5) என்ற மகளும் உள்ளனர்.
காஜா மைதீன், மனைவி, குழந்தைகளுடன் முத்துப்பேட்டை பக்ரிவாடி தெருவில் வசித்து வந்தார். அங்குள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் காஜா மைதீன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த காஜா மைதீன், மதுவில் விஷம் கலந்து குடித்தார். முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் இறந்து கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காஜா மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீதார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி ஆண்டிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த சேமன் மகன் தமிழரசன் (வயது 16),
அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தர். இவரது மாமா காங்கேயம் படியூர் சண்முகத்தின் மகன் பூபதி (18), கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பூபதி தமிழரசனின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை இருவரும் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாததால் பூபதி தண்ணீர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தமிழரசனையும் தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறு வர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார்3 கி.மீ. தூரத்தில் உள்ள சேமலை கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சிறுவர்களின் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவிநாசி பாளையம் போலீசார் மீட்டனர். இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அவி நாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.
எனவே பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவிநாசிபாளையம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்