search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் - பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாகனம் மோதி இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பால் வியாபாரி பலியானார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள குமாரவயலூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது65). பால்வியாபாரியான இவர், இருசக்கர வாகனத்தில் சென்று பால் விநியோகிப்பது வழக்கம். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் பால் கொண்டு சென்றார். வயலூர் அருகே பிரதான சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





    • பெரம்பலூர் அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குன்னம்,

    பெரம்பலூர் பனிமலர் பள்ளி எதிரில் வசிப்பவர் குணசேகரன். இவரது மகன் சாரதி (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு திருமாந்துறை சுங்கச்சாவடியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சாரதி சென்று கொண்டிருந்தார்.சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சாரதி மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாரதியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த உடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்
    • திருமணமாகி 10 மாதங்களில் பரிதாபம்

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதிகளில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி ஜங்ஷன் நோக்கி இன்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை ஸ்ரீரங்கம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். சரவணன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.இந்த பஸ் பாரதியார் சாலையில் 3 தனியார் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதியில் வந்த போது திடீரென்று விபத்தில் சிக்கியது.

    பள்ளி முன்பு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில்அதிவேகமாக வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் அதே வேகத்தில் சென்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னலை இடித்து தள்ளியது.அதோடு நிற்காமல் அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ரெயில்வே ஊழியர் மீதும் மோதியது. அதன் பின்னரும் அந்த பஸ் நிற்காமல் அங்குள்ள பிரியாணி கடையினை இடித்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு தனியார் பஸ்சின் மோதி நின்றது.

    இந்த விபத்தில் ரெயில்வே ஊழியர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் பலியானார். இறந்தவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 35) என்பது தெரிய வந்தது. ரெயில்வேயில் உதவி அலுவலராக பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் மோகன்ராஜ் தனது மனைவி பிரியாவுடன் விபத்து நடந்த பகுதியில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்த ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நல்ல தண்ணீர் வசதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதனால் அவர்கள், எதிர்ப்புறம் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக்குழாயில் காவிரி ஆற்று தண்ணீர் பிடித்து குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். வழக்கம்போல் இன்று காலை பிளாஸ்டிக் குடத்தில் மோகன்ராஜ் தண்ணீர் பிடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சுந்தர்ராஜ், கண்டக்டர் சரவணன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். விபத்தை ஏற்படுத்திய அந்த பஸ்சின் முன் பகுதி பெருமளவு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகள் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக பஸ் வந்த போது நிலை தடுமாறி பிரேக்குக்கு பதிலாக பதட்டத்தில் ஆக்சிலேட்டரை கொடுத்த காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. டிரைவரை பிடித்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்றனர். தாறுமாறாக ஓடிய பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    • கட்டிலில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 73). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. சிதம்பரம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை சிதம்பரத்தை பார்க்க அவரது மகள் வந்தார். அப்போது கட்டிலில் படுத்த நிலையில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த கோத்தகிரி போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சிதம்பரம் கட்டில் அருகே தீப்பற்ற வைத்து குளிர்காய்வது வழக்கம். அதேபோல் குளிர் காய தீ மூட்டியபோது விபத்து ஏற்பட்டு அவர் பலியாகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • தென்னிலை அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், ஏப். 18-

    தென்னிலை அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை இடை யக்காரன்பாளையம் பகுதியை சேர்ந் தவர் சுப்பையன் (வயது 65) விவசாயி. இவர், தென்னிலை அருகே, அம்மாப்பட்டி பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவையை சேர்ந்த குண ரத்ன தாமஸ் (வயது 43) என்பவர் ஓட்டி சென்ற 'ரெனால்ட்' கார், சுப்பையன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி, கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • தடுமாறி ஆற்றில் விழுந்தவர் பலியானார்
    • லாலாப்பேட்டை போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது, தடுமாறி விழுந்த சிவனடியார் உயிரிழந்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடி வட்டம், சின்னவெண்ணமலை, சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). சிவனடியாரான இவர், நேற்று மாலை, கரூர் மாவட்டம், லாலாப் பேட்டை காவிரி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏற முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக, தடுமாறி ஆற்றில் விழுந்தார். அங்கி ருந்தவர்கள், சென்று பார்த்தபோது, கோவிந்தன் உயிரிழந்தது தெரியவந் தது. லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
    • வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த இருளங்குப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 9-ந்தேதி வெளி யூருக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கி ளில வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீண்டும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் ரேணுகா தேவி மற்றும் செல்லத்துரை ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர்.
    • கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கயத்தாறு:

    சென்னை அடையாறு கிரசன்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 62). இவரது மனைவி ரேணுகாதேவி (57). இவர்களுடைய மகன் செல்லத்துரை (32). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நவநீத கிருஷ்ணன் தனது மனைவி, மகனுடன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காரில் வந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் 3 பேரும் நேற்று காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செல்லத்துரை ஓட்டினார்.

    மதியம் கயத்தாறு அருகே நாற்கர சாலையில் உள்ள பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரேணுகா தேவி மற்றும் செல்லத்துரை ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர்.

    நவநீதகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவருக்கு வலது காலும், இடது கையும் முறிந்தது. அவரை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாயனூர் கதவணை அருகில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
    • தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்ட போலீசார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சின்னசேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முகேஷ் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், மாயனுார் காவிரி கதவணை அருகில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து ெசன்று முகேஷின் உடலை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற தொழிலாளி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,

    பெரம்பலுார் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 36). தொழிலாளியான இவர், கரூர் மாயனுார் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த இவரை அப்பகுதியினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பொன்ராஜ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×