search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • இவரும் அவரது‌ நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூ ரைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

    பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் படுகை அணை பகுதிக்குச் சென்று தனது நண்பர்க ளுடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டி ருந்த பிரவின் மட்டும் காணா வில்லை. இதனால் நண்பர்கள் படுகை அணை யில் அவரை தேடி உள்ள னர். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடி யாக ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீ சார் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் படுகை அணை பகுதியில் தேடிவந்தனர். வெகு நேரம் தேடிய பிறகு படுகை அணை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்த பிரவீன் உடலை மீட்டனர். போலீசார் அவரது உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராட்சத அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா சிக்கிக் கொண்டனர்.
    • உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜாத்தி (வயது 45) தனது உறவினர் மகள் சாய்கோபிகா (9) மற்றும் சிலருடன் கடற்கரையில் நடைபயிற்சி சென்றார்.

    அவர்கள் கடல் அலை யில் கால் நனைத்தபடி நடந்து சென்ற போது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா ஆகியோர் சிக்கிக் கொண்ட னர். அவர்களை அங் கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நீர் நிலைகளில் மூழ்கி சிறுவன் உட்பட 2 பேர் பலியானர்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொணலை ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சூர்யா (வயது 11). இந்த சிறுவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை நாளாக இருந்த காரணத்தால் சூர்யா அருகாமையில் உள்ள சிறுவர்களுடன் கபடி விளையாட சென்றான்.பின்னர் அந்த சிறுவர்கள் அங்குள்ள கொணலை வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சூர்யா ஆழமான பகுதிக்கு சென்றான்.

    அடுத்த நொடி வெள்ளம் அவனை அடித்துச் சென்றது. இதைக்கண்டு பதறிப்போன மற்ற சிறுவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே சற்று நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சூர்யா பரிதாபமாக இறந்துள்ளான்.இதுகுறித்து அவனது தந்தை வீரமணி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று முக்கொம்பு காவிரி ஆற்றப்படுகையில் குளிக்கச் சென்ற திருச்சி எலமனூர் பாரதிதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி ரம்யா (33) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த இருவருக்கும் நீச்சல் தெரியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • தா.பேட்டை அருகே கல்லூரி பேராசிரியை விபத்தில் பலியானார்
    • இச்சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தா.பேட்டை

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பாமாப்ரீத்தா (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரியில் பணி முடித்துவிட்டு பாமாபிரீத்தா தனது கணவருடன் துலையாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி உள்ளார்.பின்னர் பைத்தம்பாறை கிராமத்திற்கு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெம்புநாதபுரம்-தா.பேட்டை செல்லும் சாலையில் மங்கலம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே பின்னால் சதீஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாமாபிரீத்தா மீது மோதியது.இந்த விபத்தில் பாமாபிரீத்தா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கணவன், மனைவி இருவரையும் முசிறி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பாமாபிரீத்தாவை கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லூம் வழியிலேயே பாமாபிரீத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து பாமாபிரீத்தா உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • மகேஸ்வரன், ஜெயக்குமார் மீது கட்டுப்பாடற்ற லாரி மோதியது.
    • 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் அருகே உள்ள வி.சி.காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது46). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (38) என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த மகேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோர் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேருநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (78), தர்மபுரியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் 2 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள்சாமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    இருகூர் அருகே உள்ள எல்.அன்டு.டி. பைபாஸ் ரோட்டில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்டனர்
    • கிணற்றில் குளித்தவர் உயிரிழந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான மருதையின் மகன் சாமிநாதன் (25), தொப்புளானின் மகன் விக்னேஷ் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றனர். அப்போது முருகேசன் அவரது சட்டை, லுங்கி, காலணி ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குளித்தார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் மேலே வரவில்லை.இந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதனும், விக்னேசும் இதுகுறித்து ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து முருகேசனை பிணமாக மீட்டனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடந்து சென்ற போது விபத்து
    • வாகனம் மோதி முதியவர் பலியானார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 93). இவர் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயத்துடன் 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி ரோடு பூலாவூரணியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் தரை சக்கரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

    இதில் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), தங்கவேல் (55), கருப்பம்மாள் (50) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மதியம் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவை தயார் செய்யப்பட்டது. அப்போது திடீரென மருந்துகள் உரசி தீப்பற்றியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிறிது நேரத்தில் அந்த அறை மற்றும் அருகில் இருந்த மற்றொரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த கருப்பம்மாள் உள்பட 2 பேரை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்தனர்.
    • கணவன் மனைவி பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம்சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி (வயது 25).இவரது மனைவி பீரம்மா (20). கணவன் மனைவி இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ந் தேதி செட்டிபேட்டையில் உள்ள மாந்தோப்பில் வசித்து வரும் பீம்மாவின் சகோதரி சித்தம்மா வீட்டிற்கு சென்றனர். பின்னர் இரவு கணவன், மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் மறுநாள் வீட்டிற்கு சென்றுவிட்டார்களா என கேட்பதற்காக சித்தமா தனது மாமா முனி செல்போனிற்கு போன் செய்தார்.

    போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சித்தம்மா சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பல்வேறு இடங்களில் தேடியும் சகோதரியும் அவரது கணவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சித்தம்மா புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏர்ரகாணி பள்ளி என்ற இடத்தில் சாக்கு மூட்டையில் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் புங்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மதுசூதன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர். உடல்கள் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து முனி பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதிலிருந்து சிம்மை வைத்து இறந்தவர் முனி அவரது மனைவி பீரம்மா என போலீசார் கண்டுபிடித்தனர்.

    இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாய நிலங்களை சுற்றிலும் சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தவர்கள் மின் வேலியில் சிக்கி இறந்து இருக்கலாம்.

    மின் வேலியில் சிக்கி இறந்ததை மறைப்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்தனர்.

    கணவன் மனைவி பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிக்கப் வேன் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
    • இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (40). கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சஞ்சீவி தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே சத்தியமங்கலம் சாலையில் இருந்து அத்தாணி சாலை நோக்கி மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பிக்கப் வேனை ஓட்டி வந்தார்.

    வரப்பள்ளம் சிதம்பரம் தோட்டம் அருகே முன்னே சென்ற வாகன ஓட்டி ஒருவரை பிக்கப் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.

    இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவி மனைவி சாந்தா ரத்த காயங்களுடன் கீழே கிடந்த சஞ்சீவியை அருகில் இருந்தோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இன்வெர்ட்டர் மாற்றியபோது சம்பவம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி.

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 5-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மகன் முத்துராஜா (வயது 27). பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள முத்துராஜா சமீப காலமாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் இணைப்பினை வீட்டுக்கு வெளியே மாற்றி அமைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துராஜா மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முத்துராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை ராமசுப்பிரமணியன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்ஜினீயரிங் பட்டதாரி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்
    • 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நல்வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.  இந்த சூழலில் காரைக்கால் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகிவிட்டதாக எண்ணி, ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுதனி மையில் இருந்த நிலையில், அந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவை மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால்2 பேர் உயிரிழந்த தால்காரைக்கால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    ×