search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • இன்னொரு மாணவ நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை
    • பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், திருச்சி உறையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளையில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (வயது 18) என்ற மகனும், அபர்ணா என்ற மகளும் உள்ளனர். முகேஷ் செட்டிகுளம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து அரசு பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் நித்திஷ் (13) பாடாலூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முகேஷ், நித்திஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளார். அவர்கள் பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்றனர். அப்போது முகேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அரசு பஸ்சின் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த முகேஷ், நித்திஷ் ஆகிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம் சீமலா பள்ளியில் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநாடு நேற்று இரவு நடந்தது.

    இதனால் மாநாட்டு பந்தலில் ஏராளமான கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள ராமுலு நாயக் எம்.எல்.ஏ, ராம நாகேஸ்வரராவ் எம்.பி. உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் காரில் வந்தனர்.

    மாநாட்டு பந்தல் அருகே தலைவர்களின் கார் வருவதை கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசுகளை கொளுத்தினர். தொண்டர்கள் கொளுத்திய பட்டாசு தீப்பொறி பறந்து மாநாட்டு பந்தல் கூரையில் விழுந்தது.

    இதில் மாநாட்டு பந்தல் தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    கட்சி தொண்டர்களுக்காக மாநாட்டு பந்தலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சமையல் செய்யும் பணி நடந்து வந்தது.

    அந்த இடத்தின் மேற்கூரையிலும் தீ பரவியது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுகள் நவீன், தேஜாவத் மற்றும் கட்சித் தொண்டர் பாஸ்கர் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    தீவிபத்தைக் கண்டு கட்சித் தொண்டர்கள் சிதறி ஓடியதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இந்த விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜெயங்கொண்டம் மருதூர் கிராமத்தில் விபத்து நடந்தது
    • காயமடைந்த மகளுக்கு தொடர் சிகிச்சை

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா. இவர் தனது மகள் பவித்ராவை மொபட்டின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லை கிராமத்திலுள்ள எள்ளு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார்.தண்ணீர் பந்தல் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, மருதூர் மேலத்தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மொபட் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 3 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கவிதா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் பவித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    சென்னையில் இருந்து நேற்று இரவு கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (55) என்பவர் பஸ் டிரைவராக இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்வா (21) என்பவர் பஸ் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    ஆம்னி பஸ் இன்று காலை 5.45 மணி அளவில சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை ஸ்ரீ பிளஸ் மஹால் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த கண்டக்டர் ஜோஸ்வா (21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான்நேசன் (28), அவரது மனைவி ஜெனி (26), உடுமலையை சேர்ந்த ஸ்ரீவித்யா (23), ஊட்டி கூடலூரை சேர்ந்த டேவிட் ராஜ் (50), ஜான்சிமேரி (30), குருசம்மா (46), உமேஷ் (12), சென்னை சோலையூரை சேர்ந்த பூங்கொடி (45), திருப்பூரை சேர்ந்த ஆதர்ஷ் (26), ராமாயி (65), மனோஜ் (27) உள்பட 11 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜான் நேசன் (28) என்பவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் ஜான் நேசன் மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்து வீரப்பனும்,கணேசனும் கிணற்றில் குளித்துள்ளனர்.
    • கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பெருமாள்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்து வீரப்பன்(வயது 29). கூலி தொழிலாளி. இவரது நண்பர் கணேசன். இவர்கள் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு பெருமாள்பட்டி-மாங்குடி சாலையில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது முத்துவீரப்பன் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார். உடனே தோட்டத்தில் நின்றிரு ந்தவர்கள் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து கணேசனை மீட்டனர்.

    இதுகுறித்து கரிவல ம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து முத்துவீரப்பன் உடலை மீட்டனர். கணேசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கந்தர்வகோட்டை அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்
    • காயம்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மங்கனூர் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை காண்பதற்காக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் அசோக் (வயது 23), மணி மகன் வெங்கடேஷ், மதியழகன் மகன் சூர்யா (12) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் மங்கனூர் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் போது கோமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேஷ், சூர்யா ஆகியோர் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தொடர்பாக கந்தர்வ கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 30). இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பழனி திருநள்ளாறு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த பழனியின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் தலைமை யிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக் கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைபட்ட நிலையில் பழனி உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களை கையாளும் அந்த முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அந்த ராணுவ வீரர்கள் வசிப்பதற்காக ராணுவ முகாம் வளாகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த ராணுவ முகாமுக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்ட சில நிமிடங்களில் பதிலடி கொடுக்கும் அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    அந்த ராணுவ முகாம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ராணுவ வளாகம் முழுவதையும் சீல் வைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    உள்ளூர் போலீசார் கூட உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு நடந்த அதிகாரிகள் உணவக பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது குண்டு பாய்ந்து 4 பேர் பலியாகி கிடப்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை சுட்டுக்கொன்றது யார் என்று தெரியவில்லை.

    ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிறகு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    பதிண்டா ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு நடத்தியது பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதில் நீண்ட நேரமாக மர்மம் நீடித்தது.

    ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டவர்கள் 2 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் இருவரும் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது வெளியில் இருந்து ஊடுருவியவர்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன. அது பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது.

    எனவே ராணுவ வீரர்களில் 2 பேர் தான் துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    • கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு(வயது23) ஆவார். இந்த வாலிபருக்கு கடந்த 9-ம் தேதி மாலை வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று நள்ளிரவு சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே எழுந்து சென்றார். அப்பொழுது அங்கே மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நேற்று அவரது தந்தை கோபால் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி.
    • சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சாரம் கூட்ரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் உயிரிழந்தார். விபத்து குறித்து ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்
    • நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்குத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது சேலை தீப்பற்றியது. இதனை மூதாட்டி கவனிக்காததால், தீ மள மளவென பரவி உடல், கை, கால்கள் முற்றிலும் எரிந்தது.

    இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார்
    • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகாராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×