search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • தாதாபீர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தாதாபீர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கணேசன், அய்யப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் தென்காசி மாலிக் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வரும் தாதாபீர் (வயது 45) என்பதும், இவர் தென்காசியில் உள்ள தனியார் லாரி செட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து கிழக்கு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் குடிநீர் என நினைத்து தின்னரை குடித்துள்ளார்
    • தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

    திருச்சி.

    திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 58 பந்தல் தொழிலாளி.இவர் பால்பண்ணை பகுதியில் பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து பாட்டிலில் இருந்த குடிநீர் என நினைத்து தின்னரை குடித்துவிட்டார். சற்று நேரத்தில் அடி வயிறு கலங்கியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலி யம்பாறை பாரப்பட்டி பகுதியை சேர்ந்த, தண்டபாணி மகன் நவீன் குமார் (வயது 15). இவர் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் சகோதரி பிரியாவை அழைத்துக் கொண்டு ஈசநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நவீன் குமார் மீது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. அதில், நவீன்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். சகோதரி பிரியா காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீத டிராக்டர் ஏறி விபத்து
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர், தனது நண்பர் பண்டியனுடன், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, குளத்துாரை சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி மீது அவ்வழியாக வந்த டிராக்டர் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாண்டியன், ஹரி ஆகியோர் காயமடைந் தனர். இவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் ஏந்தல் ஆசாரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது21). தச்சு தொழிலாளியான இவர், ஏந்தல் கிராமத்தில் இருந்து செதில வாடி குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக உடையார்பாளையம் எல்லைகள் தெரு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது பிரகாஷ் மோதி கீழே விழுந்தார். அப்போது அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியின் பின் பக்க சக்ரத்தில் பிரகாஷ் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரகாஷை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது பரிதாபம்
    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

    உடையார்பாளையம்,

    திருச்சி பொன்மலை ெரயில்வே குடியிருப்பை சேர்ந்த முருகன்(வயது39). இவர் திருச்சி பொன்மலை ெரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முருகன் பணியை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் நோக்கி அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றார். உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமம் அருகே சிதம்பரம் சாலையில் வரும் போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சாலையின் இடது புறம் திரும்பிய போது ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது விழுந்தார்
    • உடலை கைப்பற்றிய வாங்கல் போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் வாங்கல் போலீசாரகம் மன்மகன்களும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெரினா பேகம் (வயது 67).இவர் தனது கணவர் முபாரக் அலி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன்மங்கலம் சமத்துவபுரத்தில் தனியாக வசித்து வந்தார்இந்த நிலையில் இவர் மூர்த்தி என்பவரின் வீடு அருகில் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில், அமைந்துள்ள கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அங்கு தண்ணீர் பொதுக் குழாயில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறி கீழ்த்தளத்தில் அதிக அளவு பாசி படர்ந்து இருந்துள்ளது. இதை கவனிக்காத ஜெரினா பேகம் வேகமாக தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அவர் வழுக்கி விழுந்து தலையில் பலவித காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ஜரீனா பேகத்திற்கு தலையில் இருந்து ரத்தம் அதிக அளவு வெளியேறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாங்கள் போலீசார் ஜெரினா பேகம் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம் அணைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    • புதுக்கோட்டை அன்னவாசல் அருகே பரிதாபம்
    • உடல்கூறு ஆய்விற்கு பிறகு செத்த மானை, வனத்துறையினர் புதைத்தனர்

    விராலிமலை,

    அன்னவாசல் அருகே 1500-ஏக்கர் பரபப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வயலோகம் அருகே உள்ள குறும்பக்குளம் பகுதியில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைபார்த்த நாய்கள் துரத்தி சென்று அந்த புள்ளிமானை கடித்து குதறியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அலுவலர்கள் புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

    • மேகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 30). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொத்திமங்கலம் பைபாஸ் சாலை அருகே மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பஸ் மேகநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மேகநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார்
    • இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கள்ளிப்பட்டு அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினராக பிரபுவின் நிலத்தை கடந்து தான் ராமதாசின் நிலத்திற்கு செல்லவேண்டும்   இந்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பிரபு தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பிரபு, ராமதாஸ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராமதாசின் உடலை அவரது நிலத்திற்கு கொண்டு சென்று போட்டுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து ராமதாஸ் நிலத்தில் இறந்து கிடப்பதாக கூறினார்.

    உடனடியாக அங்கு விரைந்த கிராம மக்கள் ராமதாஸ் மின்வேலியில் சிக்கி இறந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து வளவனூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்   தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ராமதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ம் இது தொடர்பான புகாரின் பேரில் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் மின் வேலி அமைக்க கூடாது என்றும். அவ்வாறு இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் கலெக்டர் பழனி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Electric fence

    ×