search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • பிரேக்கர் எந்திரம் மூலம் உடைத்தபோது சம்பவம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    திருச்சி,

    மன்னச்சநல்லூர் மேற்கு சமயபுரம் எஸ். கண்ணனூர் ஹரிஜனதெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 27) இவர் சமீபத்தில் பிரேக்கர் எந்திரம் ஒன்று வாங்கியுள்ளார்.

    இதனைக் கொண்டு பழைய வீடுகள் மற்றும் சுவர்களை உடைக்கும் பணிகளுக்கு சென்று வந்தார். வழக்கம்போல் எடுமலை முஸ்லிம் தெருவில் உள்ள ஒருவரது வீட்டில் அந்த பிரேக்கர் எந்திரம் மூலம் சுவற்றினை உடைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து தினேஷ்குமார் கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தினேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது தாயார் சகுந்தலா சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
    • அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.

    இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.

    70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.

    அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.

    அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 குழந்தைகளும் பலியானதால் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி ஊராட்சி படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன், நாகராஜன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் லட்சுமணன் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது மனைவி தனம் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்க ளின் குழந்தைகள் மகேந்தி ரன் (7), சந்தோஷ்(4), நாகராஜன் தம்பதியின் மகள் யாமினி என்ற மீனாட்சி (10).

    இவர்களின் பெற்றோர் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில் 3 குழந்தை களும் அருகில் உள்ள செட்டி ஊரணியில் குளித்த னர். அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய பெற்றோர்கள் குழந்தைகளை தேடினர். அப்போது ஊரணியில் மூழ்கி 3 குழந்தைகளும் பலியானது தெரியவந்தது. பின்னர் பலியான 3 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பொன்னமராவதியில் உள்ள வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 3 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியின் குழந்தைகள் 3 பேர் பலியான சம்பவம் படமிஞ்சி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உளளது.

    பாதிக்கப்பட்ட குழந்தை களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்குவ தோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
    • தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    குயிடோ:

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பெரு நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள ஈக்வடாரில் பலோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். மீட்புபடையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலநடுக்கம் பெரு நாட்டிலும் உணரப்பட்டது. அங்கும் வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் ஈக்வடாரில் 13 பேர் பலியானார்கள். பெருவில் ஒருவர் உயிரிழந்தார். 126 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    ஈக்வடாரில் கடலோர மாகாணமான எல்வோராவில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பெருவில், ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பேஸ் பகுதியில் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாள்.

    எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் குயிட்டோ, மனாபி, மந்தா, குயென்சு, மச்சாலா உள்ளிட்ட நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகாயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
    • சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    டெல்லியில், கமலா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் திறந்த லிப்டில் இருந்து தவறி விழுந்து 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " சம்பவ இடத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆய்வு செய்தனர். அங்கு இரும்பிலான திறந்தவெளியில் லிப்ட் ஒன்று பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

    இந்த லிப்ட் பாதி வழியில் நின்ற நிலையில் அந்த நபர் கீழே படுகாயங்களுடன் கிடந்துள்ளார். இதை கவனித்த உரிமையார் மற்றும் சிலர் இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

    சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள ராமநா யக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). மின்வாரிய ஊழி யரான இவர், நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், விஸ்வ நாதனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கி டையே அங்கு வந்த விஸ்வநாதன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். போலீ சார் நடத்திய விசா ரணையில், விஸ்வநாதன் மின்சார வாரிய ஆய்வாள ராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் விடுமுறையில் சென்ற நிலையில், இவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்தபோது, எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர்.

    பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரிய கல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.

    வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். இது குறித்து வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40). இரவது மகன் சக்திவேல் (15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். காரில் சக்திவேல், காமாட்சி, செல்வம் (42), சஞ்சய் (13) ஆகியோர் சென்றனர்.

    காரை இளையராஜா (28) ஓட்டி சென்றார். கோளாப்பாடி அருகே கார் சென்ற போது கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    செல்வம், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலம்பட்டி பகுதியில் உள்ள பூதிநத்தம் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
    • எதிர்பாராத விதமாக பாசி வழுக்கி கீழே விழுந்ததால் சின்னவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எம். தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னவன் (வயது62). இவர் வேலம்பட்டி பகுதியில் உள்ள பூதிநத்தம் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பாசி வழுக்கி கீழே விழுந்ததால் சின்னவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பம் அருகே உள்ள போலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளம்பிள்ளை (வயது76).

    இவர் கடந்த 12-ந் தேதி ஒசூர் கிருணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த இளம்பிள்ளை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தாகார் மாகாணத்தில் உள்ள சக்அப் என்ற இடத்தில் இருந்து அன்ஜீர் பகுதிக்கு நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அந்த பஸ் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி 17 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்
    • தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே வழுதலம்பள்ளம் அரசு விளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (87). வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.இவர் தன் வீட்டருகில் உள்ள தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்.அப்போது அவர் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக் கப்பட்டது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து போ னார்.

    இது குறித்து அவரது மகன் ராஜேஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×