search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • தமிழரசன் (வயது 63).தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார் தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது,
    • தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலம்பாள் நகரைச்சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.  தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தற்போது உடல்நிலை சரியிலாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியா ளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உள்ளது.

    இந்நிலையில், அனிதா கடைக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறினார்.விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனிதா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
    • படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 45). இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளராக தொகுப்பூதிய அடிப்படை யில் பணியாற்றி வந்தார்.

    இவர் திருமலாபுரம் ஜக்கம்மாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலி

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணனுக்கு வளர்மதி என்ற மனை வியும், மது(8), நிகிதா (6), பவித்ரா (4) ஆகிய 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    • வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது தீண்டியது
    • மருத்துவமனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    திருச்சி,

    திருச்சி அருகே உள்ள சுண்ணாம்பு காரன்பட்டி பள்ளக்காடு பறைக்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (வயது 6).இந்த சிறுவன் பிராட்டியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அவனை ஒரு பாம்பு கடித்து விட்டது.அடுத்த நொடி அச்சிறுவன் வலியால் கதறி அழுதபடி மயங்கி விழுந்தான். உடனே பெற்றோர்கள் அவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக வர்ஷன் இறந்து விட்டான். இது குறித்து அவனது தந்தை பூபதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரியில் உள்பகுதியில் வேனை இறக்கியபோது திடீரென வேன் சக்கரம் ஏரி மண்ணில் புதைந்து ஏரிக்குள் சரிந்தது.
    • சோமன் பிக்கப் வேன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    காரிமங்கலம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை திருமாலிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சோமன் (வயது 42). இவர் சொந்தமாக பிக்கப் வேன் வைத்துள்ளார். இதில் முட்டைகோஸ் லோடு ஏற்றி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பிக்கப் வேனில் விற்பனை ஆகாத முட்டைக்கோசுகளை ஏற்றிக்கொண்டு முள்ளனூர் ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக கொட்ட சென்றுள்ளார்.

    அப்போது ஏரியில் உள்பகுதியில் வேனை இறக்கியபோது திடீரென வேன் சக்கரம் ஏரி மண்ணில் புதைந்து ஏரிக்குள் சரிந்தது. இதில், சோமன் பிக்கப் வேன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பெரம்பலூர்,

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மேலக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அஞ்சலை (வயது 60). கலியன் ஏற்கனவே இறந்து விட்டதால், அஞ்சலை தனியாக வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி அஞ்சலைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை அவருடைய மகள் தவமணி வேப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அஞ்சலை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மருத்துவமனையில் படுக்கையில் இருந்து அஞ்சலை தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சலை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார்.
    • லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

    அம்பாலா:

    உத்தரபிரதேசத்தில் இருந்து இமாசலபிரதேச மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்தி (வயது32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவர் திருமணம் செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. அவர் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்தி கழுவதோண்டி கரைமேடு சாலையில் உள்ள கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது அருகிலுள்ள மின்சார ஒயரில் தலை உரசவே மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கார்த்தி உயிரி்ழந்தார்.

    இச்சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத், உதவி ஆய்வாளர் இளங்கோவன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உறவினர்கள் மின்சாரத்துறையிடம் மின் ஒயரை மாற்ற பலமுறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


    • சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது.
    • பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கல்பட்டு:

    வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோபாரதி (வயது 37) திருமணமானவர். இவர் தலைவாசலில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (31) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் தொழில் சம்பந்தமாக சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை மணிரத்தினம் ஓட்டினார்.

    இரவு 10 மணியளவில் கார், படாளம் தபால்மேடு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றது.

    அந்த நேரத்தில் சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய வினோ பாரதியும் மணிரத்தினமும் இருக்கையில் அமர்ந்த நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மது குடித்து மயங்கி விழுந்த 2 பேர் பலியானார்
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பத்தாளப் பேட்டை கீழ மங்காவனம் ஹரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் தங்க–மாணிக் கம் (வயது 52). கூலித்தொழி–லாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.தொடர்ந்து நடக்க கூட முடியாத நிலைக்கு சென்ற அவர் கீழமங்கலம் டாஸ்மாக் கடை அருகாமையில் கால் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஒரு சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நலம் பாதிக் கப்பட்டது. உடனே அவ–ரது மனைவி பிரபா கணவரை மீட்டு திருச்சி அரசு மருத்து–வமனைக்கு கொண்டு சென்றார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் தங்கமாணிக்கம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரி–தாப–மாக இறந்தார். இது குறித்து துவாக்குடி போலீ––சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்ற–னர்.

    இதேபோன்று கல்லக்குடி திருவள்ளுவர் நகர் பகுதி–யில் மது அருந்தி கீழே சாய்ந்த ஒருவர் இறந்தார். அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவ–புரம் பகுதியைச் சேர்ந்த–வர் சதீஷ்குமார் (34).டிரை–வரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குடிக்கு வந்துள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கீழே விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி பாரதி கணவரை மீட்டு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவம–னையில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்து–வமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மீண்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கடைசியாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து–வமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த–போதிலும் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இருவேறு சம்பவங்களில் மது பிரியர்கள் இறந்த சம்பவம் குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

    • கரூரில் சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலியானார்
    • இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் ராயனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தெய்வமணி (வயது 56). இவர் தனது வீட்டில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில் தீப்பற்றி படுக யமடைந்தார். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத் துவமனையில், சேர்க்கப்பட்ட தெய்வமணி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் கோபி (வயது 23). இவர் கடந்த 28-ந் தேதி கள்ளபட்டியில் இருந்து கீரிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் சென்றதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கோபி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாகனம் மோதி முதியவர் பலியானார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-அரியலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே முதியவர் ஒருவர் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் முழுக்கை சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×