search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது.
    • மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது, புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் இருந்தவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் விபத்தில் சிக்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுட்ன மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலூர்:

    சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுடலைராஜன் (வயது41). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். அவருடன் அவரது தாயார், மனைவி மற்றும் 2 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    இன்று மதியம் 12.30 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. காரின் முன்பு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் பாலம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது.

    இதை கவனிக்காத சுடலைராஜன் வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த சுடலைராஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவருடன் பயணித்த தாய், மனைவி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காரில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 45 நிமிடம் போராடி காரில் சிக்கியிருந்த சுடலை ராஜன் உடலை மீட்டனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவிற்காக பட்டாசுகளை ஏற்றி வந்த மினிடோர் வாகனத்தில் தீப்பொறி பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
    • திருவிழாவில் 2 பேர் உயிரிழந்ததால் பள்ளிப்பட்டி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது சாமியை அலங்கரித்து சரக்கு வாகனத்தில் வைத்து பொதுமக்கள் ஊர்வலம் எடுத்து சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராகவேந்திரன் (வயது26) என்பவர் ஓட்டி சென்றார்.

    சாமி ஊர்வலத்தின்போது வானவேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்தனர். மேலும் வெடிப்பதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் அந்த சரக்கு வாகனத்திலேயே வைத்திருந்தனர்.

    ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் அந்த சரக்குவாகனத்தில் விழுந்தது. இதில் சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. பின்னர் அந்த சரக்கு வாகனமும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்த அசோகன் மகன் ஆகாஷ் (7) சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் படுகாயம் அடைந்த ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை கிராமத்தை சேர்ந்த ஆதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பட்டாசு வெடி விபத்தில் இறந்த சிறுவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் பெத்தம்பட்டி என்.எம்.காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தச்சு வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலகிருஷ்ணன் மனைவியை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது
    • பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (வயது38). இவரது மனைவி அமுதா (29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலன் தனது மனைவி அமுதாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கபிலன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் பாஸ்கர் (வயது 57). இவர் குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி பஸ்பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பாஸ்கர் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

    அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கே இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் போலீசார் பாஸ்கரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இடி தாக்கியதில் 3 பசு மாடுகள் பலியானது
    • 3 பசுமாடுகள் ஒரே நேரத்தில் இந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படடு உள்ளது.

    உப்பிலியபுரம்,

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாதர்பேட்டை ஊராட்சி கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திராமூர்த்தி. உப்பிலியபுரம் ஒன்றியம் 15-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். விவசாயியான இவர் தனது கணவருடன் சொந்த தோட்டத்தில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை கால்நடைகள் மேய்ச்சலையடுத்து தோட்டத்திலிருந்த வேப்பமரத்தின் அருகே 3 பசு மாடுகளையும் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் 3 பசுமாடுகளும் இடிதாக்கி இறந்து கிடந்தது கண்டு அலறினர். சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள சினை மாடு உள்பட 3 பசுக்களும் வேப்பமரத்தை தாக்கிய இடியால் இறந்து கிடந்தது தெரிய வந்ததன் பேரில் அப்பகுதியில் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் வருவாய்துறையினர், காவல்துறையினர், கால்நடைத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் எ.பாதர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சின்னதம்பி, உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் கீதா, எரகுடி கால்நடைத்துறை மருத்துவர் ஆனந்த், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இடி தாக்குதலால் 3 பசுக்களும் இறந்தது அப்பகுதியிலுள்ள கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் - சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்
    • மண்ணச்சநல்லூர் அருகே சோகம்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. டிரைவரான இவரது மனைவி சூரியகாந்தி (வயது 38). இவர்களுக்கு ராகுல் (15), சாதனா (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சூரியகாந்திக்கு கர்ப்பப்பை வீக்காக இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான, சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    10 மாதம் நிறைவடைந்தும் பிரசவ வலி வராததால் சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்று உள்ளது. ஆனால் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. சூரியகாந்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ரத்தப்போக்கு அதிகமானதாகவும், இதன் காரணமாக ஆபரேஷன் மூலம் அவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாகவும், இந்த அறுவை சிகிச்சையின் போது, அவருக்கு திடீர் என்று அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. பிரசவ சிகிச்சையின் போது தாயும் சேயும் இறந்த சம்பவம் அந்த பெண்ணின் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்டவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. ஆனால் மயங்கி விழுந்தவரை மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கல்யாணம் பூண்டி கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 43) என்பது தெரியவந்தது. நேற்று பகல் நேரத்தில் பெரம்பலூரில் வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் ராமமூர்த்தி சுருண்டு மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×