என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96565"
- கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சேர்ந்து சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி அருகில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய கன்டெய்னர் வேன் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் கன்டெய்னர் வேனை நிறுத்தும்படி கைஅசைத்தனர்.
இதை பார்த்த டிரைவர், சிறிது தூரத்திலேயே கன்டெய்னர் வேனை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசாரும், அதிகாரிகளும், கன்டெய்னர் வேனில் சோதனையிட்டனர்.
இதில் 17 கிலோ 40 கிராம் எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 44 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
- வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம் :
பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை கருதி வெட்ட கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு அனுமதி பெற்ற பின்பு பனை மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிலையில் பல்லடம் அருகே கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீரோடையில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சுமார் 15 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- சுமார் ரூ. 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
- நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 1, கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1, டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 30 பெட்டிகளில் இருந்த சுமார்1000 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அக்கரைப்பேட்டையை சேர்ந்த செண்பகம் மகன் சபரிநாதன், செல்லூரை சேர்ந்த சுரேஷ், அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
- ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
பல்லடம் :
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல் (வயது 35). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லா சர்தார்(35)என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் நான்கு நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை அறுத்து கடத்த முயற்சி நடைபெற்று உள்ளது
- புகாரின் பேரில் கடத்தல் முயற்சி நபர்களை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான, ஒரு சந்தன மரத்தை அறுத்து சாய்த்தும் மற்ற ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை அறுத்தும் மர்ம நபர்கள் சாய்த்தனர். மேலும் இந்த மரங்களின் மைக்ரோ சுமார் 8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் சந்தன மரங்களை பாதியில் மரத்தை அறுத்து சாய்த்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்
- பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
- புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.
திருப்பூர் :
சேலம் கெங்கவள்ளி செந்தாரப்பட்டியை சேர்ந்த, கார்த்திக்,(25) டிரைவர். இவர் திருப்பூர்,பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டு ப்புதூரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அந்த பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.பின்னர் கார்த்திக்கை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சுண்டக்காம்பாளையத்தில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது.
- மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் காசி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 53)என்பவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையத்தில் எனக்கு 2.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது. இந்த நிலையில் நான் கடந்த வாரம் வெளியூர்சென்று விட்டேன். அப்போது எனது தோட்டத்தில் இருந்த வேப்ப மரங்களை மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெ ட்டி கடத்திச் சென்றுள்ளனர் .
இது பற்றி அவர்களிடம் கேட்டபோது அலட்சிய மாகவும் மிரட்டல் விடும் தொணியிலும் என்னை மிரட்டுகிறார்கள் .எனவே இது குறித்து விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
- ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி புதுநகர் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அஸ்வினி (வயது 20), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். மாலை வீடு திரும்ப வில்லை. கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் தந்தை கணேசன் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி அஸ்வினியை தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் இருந்து சட்டத்தை மீறி கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
- வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.
கடையம்:
முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் தமிழ கத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விதிகளையும், மோட்டார் வாகன சட்டத்தையும் மீறி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளை சர்வே செய்ய வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான குவாரிகள் சட்ட விதிகளை மீறி தான் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு கனிமவள கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கனிமவள கடத்தலை தடுக்க உதவாது. சாலை பாதுகாப்பு விதி களையும், மோட்டார் வாகன சட்டத்தையும், கனிமவள சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கனிமவள கடத்தல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மாநில எல்லையில் வருவாய்துறை, கனிமவளத்துறை, போக்கு வரத்துத்துறை, காவல்துறை செக்போஸ்டுகள் இருந்தும் கனிமவள கடத்தல் தொடர்கிறது.
அதிகனரக வாகனங்களில் விதிகளை மீறி அதிக பாரத்துடன் கனிமங்கள் ஏற்றி செல்வதால் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சாலையில் பயணிக்கவே அச்சப்படு கின்றனர். கனிமவள கடத்தல் தொடருமானால் வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை இன்னும் 10 ஆண்டுகளில் உருவாகி, வருங்கால சந்ததியினர் வெளி மாநிலத்தில் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எனவே அரசு கனிமவள கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- காரில் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார்
- நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
அரவக்குறிச்சி அருகே, சிறுமியை கடத்தி சென்றதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆர். புதுப்பட்டி பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், ஈட்ட மணநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜன், தங்கராஜ், தண்டபாணி ஆகிய, நான்கு பேரும் சிறுமியை காரில் கடத்தி சென்றதாக, சிறுமியின் தந்தை, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் வேல்முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
- வேலைக்கு சென்றவர் மாயம்
- வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டை உள்ள தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல கடைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன பெண் குறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பலனில்லை.இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை முத்துசாமி (வயது 52 ) கொடுத்த புகா ரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி விட்டார்களா? அல்லது காதலனுடன் சென்று விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
- அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்து றையூர் கிராமத்தில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ராம சாமி ஆகியோர் தீவிர சாராயம் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போதுஅந்த வழியாக வந்த திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்