search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர்"

    கொரோனாவால் வேலை இழந்த என்ஜினீயர் கொள்ளையனாக மாறி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இதுசம்பந்தமான வீடியோ காட்சி அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பரபரப்பாக காணப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் புகுந்த ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

    அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி அணிந்து வந்த அந்த நபர், 2 முககவசம் அணிந்து இரும்பு கம்பியால் உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் (வயது35) என்பது தெரிந்தது. பி.இ படித்துள்ள சிவச்சந்திரன் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார்.

    இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில் தன்னுடன் வேலைபார்த்தவரை 2-வதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.

    வேலை இழப்பு மற்றும் செலவிற்கு பணம் இல்லாதது, மனைவி பிரிந்து சென்றது போன்ற காரணங்களினால் மனம் உடைந்து காணப்பட்ட சிவச்சந்திரன் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    அமெரிக்க இளம்பெண்ணுக்கும், திட்டக்குடி என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று பெற்றோர் முன்னிலையில் நடந்தது.
    கடலூர்:

    அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (வயது 22). இவரும், இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்து தமிழ் கலாசாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

    அந்த சமயத்தில் பிரட்டி, முகநூலில் தமிழ் கலாசாரம் பற்றி தெரிவிக்குமாறு கூறி இருந்தார். இதை பார்த்ததும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(25), தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை முகநூலில் பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் முகநூல் மூலமே தகவலை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி, பேசி வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரட்டியின் பெற்றோர் மற்றும் சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பிரட்டி கூறுகையில், தமிழ் கலாசாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் தமிழ் கலாசாரப்படி சேலை கட்டி வருகிறேன்.  இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரியபிரகாசுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.



    முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தமிழ் கலாசாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும், தேதி முடிவு செய்யப்பட்டு தமிழ் கலாசாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும் என்றார். 
    துடியலூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் வி.கே.ஆர்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் டேனியல் ராஜ் (வயது 34). சிவில் என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், 2 பவுன் பிரெஸ்லெட் உள்பட 11 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து டேனியல் ராஜ் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை பி.என்.புதூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 35). இவரது வீட்டை பராமரிப்பு பணி செய்து வருகிறார். பணியில் கட்டிடத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேலை முடிந்து ஆட்கள் சென்ற பின்னர் அவர் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பிரித்திவிராஜ் இது குறித்து சாய்பாபகாலனி போலீசார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு வேலை செய்த கட்டிடத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர், பெண் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #facebooklove
    சேலம்:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஒருவர் சேலத்தை சேர்ந்த 22 வயது என்ஜினீயருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனை அறிந்த 2 பேரும் பேஸ்புக் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மற்றும் படங்கள் அனுப்பியும், பேஸ்புக் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    எத்தனை நாளுக்கு தான் தூரத்தில் இருந்து பேசுவது என்று நினைத்த இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை என்ஜினீயர், பெண் டாக்டரிடம் தெரிவித்தார். உடனே அதற்கு சம்மதித்த பெண் டாக்டர் சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

    அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டல் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த ஜோடியினர் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அந்த ஜோடி வந்தது. அப்போது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், வி‌ஷம் குடித்ததாகவும் மாறி, மாறி கூறினார்.

    உடனே ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை பெண் டாக்டர், என்ஜினீயரின் உறவினர்களுக்கும் தெரிவித்தார். அதனால் அவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். தொடர்ந்து டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது: அதன் விவரம் வருமாறு:-

    ஓட்டல் அறையில் மயங்கி விழுந்த பெண் டாக்டர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தையும் டாக்டர். சேலத்தில் காதலனுடன் ஓட்டல் அறையில் 10 நாட்கள் உல்லாசம் அனுபவித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

    இதற்கு என்ஜினீயர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.25 லட்சத்தை பெண்டாக்டரிடம் இருந்து செலவுக்கு என்ஜினீயர் வாங்கியுள்ளார். ஓட்டலில் தங்கியதற்கான பணத்தையும் அந்த பெண் டாக்டரே வழங்கினார்.

    இதனால் மனம் உடைந்த பெண் டாக்டர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மகராஷ்டிராவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலறியடித்த படி சேலத்திற்கு விரைந்துள்ளனர்.

    திருமணத்திற்கு என்ஜினீயர் மறுத்தால் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#facebooklove
    காதலியை திருமணம் செய்ய பெற்றோர் காலம் தாழ்த்தி வந்ததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் அய்யம்பெருமாள். இவரது மகன் சாமிநாதன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் படி கடந்த 2 வருடங்களாக கூறி வந்தார்.

    அதற்கு அவரது பெற்றோர் வயது 25 தான் ஆகிறது. இன்னும் 1 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியதாக தெரிகிறது. பெற்றோர் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்ததால் கடந்த சில நாட்களாக சாமிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரத்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார்.

    பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வி‌ஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். அவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்து சாமிநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் என்ஜினீயரை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டணம், வளையல்காரத் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் மகன் காஜா (வயது 27), என்ஜினீயர். இவர் பக்ரீத் பண்டிகைக்காக மதுரையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் நண்பர்களுடன் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் தெப்பத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார்.

    அப்போது அங்கு ஏற்கனவே கிரிக்கெட் விளையாடிய சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் எதிர் தரப்பினர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் காஜா, குல்முகமதீன், பைசூல் வகிதின் ஆகியோர் காயமடைந்ததாக திடீர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திடீர்நகரைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (22), பகத்சிங் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #tamilnews
    கீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுவையில் என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஜெயிலில் அடைக்கப்பட்ட கொள்ளையனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தம் வீதியில் வசித்து வருபவர் சாந்தன். இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுபோல் புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்த டெய்லர் சுந்தர் என்பவர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளைபோனது.

    இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருளையன்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த சுந்தர் (வயது 32) என்பவனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவனிடம் விசாரணை நடத்திய போது, என்ஜினீயர் சாந்தன் மற்றும் டெய்லர் சுந்தர் ஆகியோர் வீடுகளில் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தான்.

    இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த சுந்தரை ஒதியஞ்சாலை போலீசார் இன்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையன் சுந்தர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் வேறு எங்காவது இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    நெல்லை அருகே காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 2 என்ஜினீயர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியை சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், டிப்ளமோ என்ஜினீயர் ஆவார்.

    இந்த நிலையில் குறிப்பன்குளம் பகுதியில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று பழுதாகி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனை சரிசெய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தைச் சேர்ந்த என்ஜினீயர் முத்துப்பாண்டி (25) என்பவர் வந்திருந்தார்.

    இருவரும் பழுதான காற்றாலை டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு பணி முடிந்து, மீண்டும் டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பை கொடுத்தபோது பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

    இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் முத்துப்பாண்டி, கிங்ஸ்டன் ஆகியோர் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். #tamilnews
    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
    கோயம்பேடு:

    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தரைதளத்தில் இருந்த பாதுகாவலர் அவரை கைகளில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

    சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

    ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க்கப்பட்டு உயிர்தப்பினார்.

    ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    இங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

    வாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினார்கள். 
    ×