search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திக்குத்து"

    நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கிருஷ்ணராயபுரம்:

    கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகன் கோபி (23). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, ஆகஸ்டு 6-ம் தேதி ஓடும் ரெயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நேற்று வழக்கம்போல் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் கோகுரியோ ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சக பயணிகளை திடீரென கத்தியால் குத்தத் தொடங்கினார்.

    இதனால் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபர் பயணிகளை தொடர்ந்து கத்தியால் குத்தினார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த வாலிபர் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். 

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 55). இவர், சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

    அதன் அடிப்படையில் ஏட்டு ஆனந்தனுடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ரோந்து பணிக்குச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் சின்னக்கட்டளை பகுதியில் சென்றனர்.

    அப்போது அங்கு 2 பேர் போர்வையால் உடலை மூடியபடி நிற்பதை பார்த்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரையும் தனித்தனியாக சப்-இன்ஸ்பெக்டர் மாயன் விசாரித்தார்.

    அந்த நேரத்தில் ஒருவன் திடீரென மாயனின் கழுத்தில் கத்தியால் குத்தினான். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாயன், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. #Viswasam #AjithKumar #ViswasamFDFS
    அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    சிவா இயக்க அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமய்யா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் நள்ளிரவு 1.30 மணிக்கு சில திரை அரங்குகளில் ரிலீசானது. கண் விழித்து பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் உதவியுடன் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

    வேலூரில் ஒரு திரையரங்கில் சில ரசிகர்கள் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் ரிலீசானதை கொண்டாடியதோடு வெற்றி அடைய பிரார்த்தனை செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட்டுகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர்.



    வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் தியேட்டருக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சியில் படம் பார்க்க சென்றனர்.

    அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடித்தபடி தியேட்டருக்குள் சென்ற போது, பிரசாத்துக்கும், மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தினர். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இதனை தடுக்க வந்த ரமேசையும் தலையில் கத்தியால் வெட்டினர்.

    இதனை கண்ட ரசிகர்கள் தியேட்டரில் சிதறி ஓடினர். கடும் பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். #Viswasam #AjithKumar #ViswasamFDFS

    முன்விரோத தகராறில் தேமுதிக பிரமுகரை கத்தியால் குத்திய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (வயது 42). தே.மு.தி.க. பிரமுகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராம்கி மற்றும் அவரது நண்பர் நெய்வேலியை சேர்ந்த என்ஜினீயர் விஷ்னு(21). உள்பட 7 பேர் அன்ந்தராமனின் வீட்டிற்க்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்த அனந்தராமனை, ராம்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதை தொடர்ந்து ராம்கி அவரது நண்பர்களுடன் சேர்ந்து அனந்தராமனை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனந்தராமனை சரமாரியாக குத்தினர். கத்திக்குத்தில் தலை மார்பு உள்பட பல்வேறு இடங்களில் அனந்தராமன் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அதன் பின்னர் ராம்கி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

    படுகாயம் அடைந்த அனந்தராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனந்தராமனை அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் அனந்தராமன் புகார் செய்தார். அதன் பேரில் ராம்கி மற்றும் நெய்வேலியை சேர்ந்த அவரது நண்பர்கள் என்ஜினீயர் விஷ்னு, ராஜதுரை, சாமிதுரை, ரஜினி, அருண்குமார், மகேஸ்வரன், ஆகிய 7 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விஷ்னுவை கைது செய்தார். மற்ற 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
    விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #JaganmohanReddy
    நகரி:

    ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 25-ந்தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் சீனிவாஸ் என்பது தெரிந்தது.

    காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியபோது தொண்டர்களை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கத்தியால் குத்திய சீனிவாஸ் பணிபுரியும் ஓட்டலின் உரிமையாளர் அர்‌ஷவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல அரசு சதி செய்கிறது என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கத்திகுத்து சம்பவம் ஒரு நாடகம் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி மீது நடந்த கொலை முயற்சி குறித்து ஆந்திர மாநில அரசு நடத்தும் விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் மூன்றாவது நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.

    மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய். வி.சுப்பாரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள் அனில் குமார், அமர்நாத் ரெட்டி மனுவை தாக்கல் செய்தனர். #JaganmohanReddy
    தட்டாஞ்சாவடியில் 2 பேரை கத்தியால் குத்திய கல்லூரி பேராசிரியர் மற்றும் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது37), நேற்று முன்தினம் இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான குமார் என்பவரும் கோரிமேடு பட்டானூர் சுங்கச்சாவடி மையம் அருகே மதுஅருந்தி நண்பர் பிறந்த தினவிழாவை கொண்டாடினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    உற்சாக மிகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வளைந்து வளைந்து வந்தனர். தட்டாஞ்சாவடி பகுதியில் இதுபோன்று வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் கல்லூரி பேராசிரியர் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இவரது நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயர் வினோத்குமார் (32) ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

    இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஹேமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கத்தியை எடுத்து தட்சிணாமூர்த்தியையும், குமாரையும் குத்தினார். மேலும் வினோத்குமார் அவர்களை கையால் தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி, குமார் ஆகிய இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். குமார் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்லூரி பேராசிரியரான ஹேமச்சந்திரன் மற்றும் என்ஜினீயர் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    சீனாவில் சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் மீது நடத்திய கத்திக்குத்து தாக்குததில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். #KnifeWielding #SchoolChildren
    ஷாங்காய்:

    சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.



    உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய ஒரு மாணவருக்கும், படுகாயம் அடைந்த மாணவர் ஒருவரின் தாயாருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் 29 வயதானவர். வேலை இல்லாதவர். சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டவர். அந்தக் கோபத்திலும், வெறுப்புணர்விலும்தான் அப்பாவி மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார் என தெரியவந்து உள்ளது.

    இந்த சம்பவம், ஷாங்காய் பகுதியில் உள்ள பெற்றோர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் தொழுகை நேரத்தில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #SouthAfrica #MosqueAttack
    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் மால்மேஸ்பரி நகரில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கே தன் கண் எதிரே பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்திச் சாய்த்தார்.

    இதனால் மசூதியில் தொழுகைக்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரை உடனடியாக சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அந்த நபர், அதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    அவர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது பயங்கரவாதத்தின் கூறு என கூறினர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   #SouthAfrica #MosqueAttack  #tamilnews
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே நிதி நிறுவன அதிபரை சரமாரி கத்தியால் குத்திய 5 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த வாலிபர்கள் கவுதம் (வயது 18). கார்த்திக் (21). பிரவீன் (19). விக்னேஷ் (19), பில்கிளிண்டன் (20).

    இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இவர்களில் நேற்று கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் அவரது நண்பர்களும் சேர்ந்து கார்த்திக்கின் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் குஷியுடன் சென்று கொண்டிருந்தார். வளைந்து... வளைந்து பைக்கை ஓட்டினாராம்

    இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான நந்தீஸ்வரன் (31) என்பவர், “ஏன் தம்பி இப்படி பயமுறுத்துவது போல் வண்டி ஓட்டுகிறாய்?” என்று கேட்டார்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பிறகு அது மோதலாக வெடித்தது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் பில் கிளிண்டன் ஆகிய 2 பேரும் நந்தீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்தினார்களாம்.

    இதில் அவருக்கு இடுப்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நிதிநிறுவன அதிபர் நந்தீஸ்வரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான 5 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே உள்ள பந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு, சின்னாறு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற 8 பேர், சின்னாறு பஸ் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோவிந்தன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பெங்களூரு நெலமங்களா பகுதியை சேர்ந்த மது (19) என்பவர், கோவிந்தனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×