search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை"

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதி களில் வார சந்தைகளும் நட ந்து வருகிறது.குறிப்பாக தில்லை நகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராம லிங்க நகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வார ச்சந்தைகள் நடந்து வருகிறது.இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி யாக இருந்ததால் பொதும க்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தர மாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இத னால் வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி த்து வந்தனர்இந்த நிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியி ருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் ந டத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர்.ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இது போன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்ப டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாந கராட்சிக்கு கூடுதல் பணி ஏற்படுகிறது.ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.அதேசமயம் விவசாயிகள் வியாபாரிகள் வழக்கம் போல் வாகனங்கள் மூல மும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதி க்கப்படவில்லை என்றனர்.

    • ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை.
    • சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.

    சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.

    இங்கு, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

    இதன் எதிரொலியால், சென்னையில் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
    • கூட்டஅரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டம்

    கோவை,

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா நேற்று தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு உள்ளது. இது அதிகம் எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கினீர்களோ அதே தொகை தான் இப்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

    ஆனால் அதி.மு.க. கவுன்சிலர் பிரகாகரன் மேயர் பதிலை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்யும் நோக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

    இதனையடுத்து மேயர் கல்பனா அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தாக கூறி அடுத்து நடைபெற உள்ள 3 மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், கூட்ட அரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வரும் வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    காங்கயம்:

    முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பலன்களை ஆய்வு செய்ய நிவுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கடுமையான தடையை அமல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலத்தின் மீன்வரத்து கடந்த நிதியாண்டில் 6.9லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    ஆகவே மீன்படி தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.   

    • 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்"

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொட்டாரம் பகுதியில்உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    • 2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது.
    • 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது.

    பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது. மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் போராடியது.

    2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுகள் அங்கு வசித்து வரும் ஐந்து மில்லியன் வலிமையான இஸ்லாமிய சமூகத்தில் சிலரைக் கோபப்படுத்தியது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது பிரான்சில் ஒரு பேரணியாக உள்ளது.

    இந்நிலையில், "பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன்" என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார்.

    "நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது
    • இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒரு கல் குவாரி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கல் குவாரிகள் செயல்பாடுகள், கனிம வளங்கள் அதிகமாக எடுக்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து, குவாரிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கனிம வள இயக்குனர் ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதித்து அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டன. மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) கல் குவாரிகள் இயங்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் கல் குவாரிகளை ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
    • இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரட்டை மடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அரசு சட்டம் வைத்துள்ளது. ஆனால் அதையும் மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படகு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்கி வருகிறது. தற்பொழுது புதிதாக விண்ணப்பித்தவர் பலருக்கும் மண்எண்ணை வழங்காமல் உள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகும் மண்எண்ணை வழங்கப்படவில்லை. உடனடியாக மண்எண்ணை வழங்காவிட்டால் மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேல்மிடாலம் பகுதியில் மீன் பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். கேசவன் புத்தன் துறை பகுதியில் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும். கடற்கரை கிராமங்களில் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் இரட்டை மடி மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 14 நாட்டிங்கல் வரை மீன்துறை அதிகாரிகள் சென்று கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தேங்காய்பட்டினத்தில் குஞ்சு மீன்களை பிடித்து வரும் படகுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேல்மிடாலத்தில் ரூ.35 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கேசவன் புத்தன் துறையில் தூண்டில் வளைவு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது
    • பொதுமக்களின் வருகை அதிகரித்ததால் வனத்துறையினர் நடவடிக்கை

    உப்பிலியபுரம் ,

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர் . ஆடி மாத வழிபாட்டிற்காக பெரியசாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் , கோட்டப்பாளையம் கிருஸ்துவ திருவிழாவிற்கு வந்த பொதுமக்கள் வழிபாட்டை முடித்து புளியஞ்சோலையில் குவிந்ததால் அப்பகுதி களைகட்டியது .வனத்துறை வனவர் பிரியங்கா தலைமையில் வனக்காப்பாளர்கள் மணிகண்டன் , சதீஸ் , கவாஸ்கர் , குமார் , இக்னேஷ் ஆகியோர் சுற்றுலா பயணிகளிடம் மதுபாட்டில்கள் , தடைசெய்யப்பட்ட பொருள்கள் பற்றிய சோதனைக்குட்படுத்தியதன் பின் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர் . பாதுகாப்பு முன்னெச்செரிக்கையாக துர்மரணங்கள் நடைபெறும் பாறைகளுடனுள்ள ஆழமான நாட்டாமடு பகுதியை சுற்றி சிகப்பு துணிகளை கட்டி தடைசெய்யப்பட்டதன் பேரில் , பொதுமக்கள் ஏமாற்றத்துடன் நீரோட்டங்களில் நீராடினர். உப்பிலியபுரம் போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    • 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்பட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாத சிறை அல்ல து 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டணை வழங்கப்படும்.

    இது தொடர்பான விவரம் பெற கலெக்டர் அலுலக அறை எண் 408-ல் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.,

    ×