search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.

    கோவை,

    கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது.

    இதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.

    7-ந் தேதி காலை 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, எந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 5 மணிக்கு மூல மந்திர ஹோமம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    8-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 9.15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    காலை 9.45 மணிக்கு ஸ்ரீதிரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்க சிறப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ ஞானசேகர சிவாச்சா ரியார் மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள்.  

    • இக்கோவிலின் கும்பாபிஷேக விழா 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
    • பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தில் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் அமைய பெற்றுள்ள சிறப்பு வாய்ந்த சிவதலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. சிவபெருமான் தனது சிறுத்தொண்டர் எனும் சிவபக்தரின் அன்னதான மகிமையை சோதிக்கும் விதமாக, சிவனடியாராக தோன்றி பிள்ளைக்கறி சமைத்து கேட்டதாகவும், அதற்காக தனது ஒரே மகனையே சமைத்து அன்னமிட சிறுத்தொண்டர் முன் வந்ததையும், இதனைக் கண்ட சிவபெருமான் தன் பக்தரின் சிவத்தொண்டினை பாராட்டி, அவரது மகனையே உயிர்ப்பித்துக் கொடுத்ததாகவும் இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுதுபடையில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த அமுதுபடையலில் சுவாமி அன்னபிரசாதம் வாங்கி உண்டால், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் மற்றும் விநாயகர், பாலமுருகன், தக்சாணமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம் ஆகிய பரிவாரங்களோடு லிங்கோத்பவர், பைரவர் ஆகிய மூர்த்திகளும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு இக்கோவிலின் கும்பாபிஷேக விழா 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

    இதை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. இதேபோல் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 3-ந் தேதி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, திருநெல்வேலி மாவட்டம் செங்கோல் ஆதீனம், திருவாரூர் மாவட்டம் வேளாக்குறிச்சி ஆதினம், திண்டுக்கல் மாவட்டம் சிவபுர ஆதினம், தஞ்சை மாவட்டம் ஆம்பலாபட்டு சிவராஜ மகேந்திர சுவாமிகள் ஆகியோருடைய முன்னிலையில் காலை 8 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பட்டு காலை 8.45 மணிக்கு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 8.55 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும், இரவு திரைப்பட இசையமைப்பாளர் தேவா குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
    • மஹாகும்பாபிஷேகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.

    ஆவடி காந்திநகரில் (காமராஜர் சிலை அருகில்) உள்ளது அருள்மிகு ஸ்ரீரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெய்வங்களின் விமான மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் மார்ச் 9-ம்தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7-ம்தேதி (செவ்வாய் கிழமை) காலை 8.30 மணிக்குஅனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரஹனம், அங்குரார்ப்பனம், சங்கல்பம், ஆச்சாரிய ரஹா பந்தனம், கும்பாலங்காரம், கலச ஸ்தாபனம் முதல் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    8-ம்தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்னியாக வாசனம், சோமகும்ப பூஜை, விசேஷ சாந்தி, பூத சுத்தி யந்த்திர ஸ்தாபனம், நூதன தெய்வ மூர்த்திகளுக்கு நேத்ர நயனோமீலன (கண்திறத்தல்) இரண்டாம் கால யாக பூஜைகள், தீபாராதனையும், பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்னியாக வாசனம், கோபூஜை, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், மூன்றாம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.

    9-ந்தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்னியாக வாசனம், காப்பு கட்டுதல், நான்காம் கால யாக பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது.

    காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடங்கள் புறப்பாடு, விமானம், முலாலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மஹா கும்பாபிஷேகத்தை சிவாகம ரத்னாகர சிவஸ்ரீ P. சரவண சுவாமிநாத சிவாச்சாரியார்கள் சர்வசாதகம் செய்து வைக்கிறார்.

    சிவஸ்ரீ A.V.K.சுவாமிநாத சிவாச்சாரியார்(அம்மன்குடி), சிவாகம வித்வான். K. கிருபாகர சிவன், V, பரணிதர சிவாச்சாரியார், T. ரவி(எ) நடராஜன், கஜேந்திரன், உபசர்வசாதகம் செய்து வைக்கிறார்கள்.

    மேலும் ஆலய திருப்பணியை சிவ. வினாயகமூர்த்தி, ஆர்.ரவீந்திரபாபு, T.C. பாலாஜி (எ)டேனியல் பாலாஜி, A.K.லோகாநன், M.V.யுவராஜ், P.T.ஆறுமுகசாமி, A.L.தேவராஜ், ஹேமந்த்குமார், N.நிர்மல் குமார், M.ஸ்ரீதரன், E.ராஜன்பாபு,பொ.லோகநாதன், மு.பிரபாகரன், TRC.வெங்கடேஷ், M.விஜயபாஸ்கர், M.கோபிகிருஷ்ணா, உ.நரேஷ், புரு.ரமேஷ்பாபு, P.L.ஜீவானந்தம், D.கிருஷ்ணமூர்த்தி, D.சுப்பிரமணி ஆகியோர் ஆலய திருப்பணி நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    அம்மன் கற்கோவில், கொடிமரம்(ம)மண்டபம் நிர்மானம் செய்ய, T.R.C.ராஜலட்சுமி சந்திரைய்யா செட்டியார், T.C.பாலாஜி (எ) டேனியல் பாலாஜி, TRC. வெங்கடேஷ், ஹேமலதா இராஜன்பாபு, ஸ்ரீமதி சுகுமார், T.C.யுவராஜ், G.அனந்த கிருஷ்ணன், K.G.F.புகழ் நடிகர் யஷ், சூரியகுமாரி விட்டல் போன்றவர்கள் கைங்கர்யம் செய்துள்ளனர்.

    வினாயகர் சன்னதி கட்டுமானம் கவின் ராகவ், தங்கம்மாள், கோட்டீஸ்வரி மனுவேல் ஆகியோர் உபயம் செய்துள்ளனர்.

    சிவன் சன்னதி கட்டுமானம் பரமேஸ்வரி பொன்னம்பலம் லோகநாதன், குணபூசனம் சிவ.வினாயக மூர்த்தி, அனிதா ஜீவானந்தம், மைதிலி, சந்திர மோகன் முதலானோர் உபயம் செய்துள்ளனர்.

    சீனிவாச பெருமாள் சன்னதி கட்டுமானத்திற்கு கல்பனா நரேஷ், இராணி பக்தவச்சலம், வீணா பிரபாகரன், லாவண்யா ஹோமந்த்குமார், இந்துமதி நிர்மல் குமார் போன்றோர் உபயம் செய்துள்ளனர்.

    காமாட்சி அம்மன் சன்னதி கட்டுமானத்திற்கு ராஜலட்சுமி சந்திரையா செட்டியார், லதா TRC வெங்கடேஷ், மல்லிகா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உபயம் செய்துள்ளனர்.

    முருகர் சன்னதி கட்டுமானத்திற்கு ஸ்ரீதேவி P.T. ஆறுமுகசாமி, கிரிஜா ரவீந்திரபாபு, எம்.வி.மோகனராணி, சந்திரா லோகநாதன் ஆகியோர் உபயம் செய்துள்ளனர்.

    நவக்கிரஹ சன்னதி கட்டுமானத்திற்கு ஹிமா பிந்து ரமேஷ்பாபு, உஷா மூர்த்தி, ராணி ஸ்ரீதரன், உஷா தேவராஜ் ஆகியோர் உபயம்செய்துள்ளனர்.

    R.சிவராம சித்ராரங்கராஜ் பைரவர் சன்னதி கட்டுமானத்திற்கு உபயம் செய்துள்ளார்.

    மஹாகும்பாபிஷேகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. விரும்புவோர் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற இருப்பதால் ஒருநாள் பூஜைக்கு ரூ.2000 திருக்கோயிலில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    நன்கொடை அளிக்க விரும்புவோர் நேரிலோ அல்லது கனரா ஆவடி எண்: 637501000028/ IFSC Code CNRB0006375 என்ற எண்ணில் செலுத்தலாம்.

    மேலும் விவரங்கள் அறிய 9444071433/ 8056913225/ 9884066441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தென்கரை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராம வைகைக்கரையில் அமைந்துள்ள ஆதிகாலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் ேகாவில் நாகேசுவரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. மேளதாளத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மகா கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை.
    • கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1998ல் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை. மீண்டும் நடத்த முடிவெடுத்து, தற்போது கோவில் சன்னதிகள், மண்டபங்கள், வளாகம் உள்ளிட்ட பகுதிகள் பழமை மாறாமல் வைணவ ஆகமமுறைப்படி மத்திய தொல்லியல்துறை விதிகளின்கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    உபயதாரர்களை காரணம் காட்டி பணிகள் தொய்வடைந்து வந்தது. 108 வைணவ தளங்களில் 63-வது கோவில் மூவலர் கருவரை மூடிக்கிடப்பதால் எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்? என பக்தர் ஒருவர் கேள்வி கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் திருப்பணிகள் குறித்தும், கும்பாபிஷேகம் எப்போது நடத்துவீர்கள் எனவும், கேள்வி எழுப்பினார். அதற்கு கோயில் நிர்வாகம் மே.4ல் கும்பாபிஷேகம் நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதையடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார். அதனால் இன்னும் கும்பாபிஷேகம் நடத்த நாட்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

    நீதிமன்றத்தில் தெரிவித்த தேதியில் பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த முடியுமா? உபயதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
    • திருப்பணி முடிந்து 2 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு கால பஞ்சசுத்த ஹோமம் பூர்ணாதி நாராயணன், ராஜு மற்றும் பக்தர்கள் உபயத்தோடு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    பாலாலயத்தில் விமானம் உட்பிரகாரம் மதில் சுவர்கள் கோபுரங்கள் என அனைத்தையும் திருப்பணி முடித்து இரண்டு மாத காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழு தெரிவித்தனர்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய்,செயல் அலுவலர் சக்திவேல், கோவில் எழுத்தர் செல்வன் மற்றும் பட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
    • கோவில் ராஜகோபுரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2008-ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப் போனது. இதனால் ராஜா எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கும்பாபிஷேகம் மற்றும் ஆயிரம் ஆண்டு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுகுறித்து அறநிலை யத்துறை சார்பில் சங்கரன் கோவில் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.7.50 கோடி செலவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோவிலில் செப்பணிட திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடமுழுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நடத்திடவும்,

    மேலும் கோவிலின் ஆயிரமாவாது ஆண்டு விழாவும் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் கும்பாபிஷேக பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது கோவில் விமானங்கள் ராஜகோபுரம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி கார்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த குமாஸ்தாமுருகன், வீராசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
    • கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது.இத்திருக்கோயில் ஜுர்ணோ தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 21-ம் தேதி வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜையோடு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து எட்டுத்திக்கு பூஜை, புற்றாங்கண் மண் எடுத்தல், பிரவேசபலி, கோ பூஜை, நாடி சந்தானம் பூஜை களோடு நான்கு கால யாக வேள்வியோடு, மஹா பூர்ணாஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க யாக சாலையிலிருந்து குடங்கள் புறப்பாடடோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து லஷ்மி பூஜை மகா ஹோமத்தோடு காமாட்சி உடனுறை கைலாச நாதர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவில் வயலப்பாடி, வேப்பூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்

    • அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
    • கடந்த 2 தினங்களாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் கடந்த 2 தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து காசி, இராமேஸ்வரம் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்து தலையில் சுமந்து ஊர்வலமாக யாகசாலையில் இருந்து எடுத்துச்சென்றனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க புனித நீரானது அங்காள பரமேஸ்வரி ஆலய கலசத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கருட வாகனங்கள் காட்சியளிக்க புனித நீரானது கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அங்காளபரமேஸ்வரி அம்பாளின் அருள்பெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலங்காடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலீசார் செய்திருந்தனர்.


    • வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.
    • நாளை முதல் கால யாக பூஜை தொடங்கி 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரில் ராமநாதசாமி கோவில் உள்ளது. தசரத மன்னன் வழிபட்ட தலமான இங்கு சனி பகவான் மந்தாதேவி ஜேஸ்ட்டா தேவி சமேதராய் காட்சியளிக்கிறார். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நாளை(புதன்கிழமை) முதல் கால யாக பூஜை தொடங்கி வருகிற 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 6.50 மணிக்கு விமான குடமுழுக்கும், தொடர்ந்து மூலவர்கள் குடமுழுக்கும் நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மனோஜ், ஞானசேகர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், தக்கார் அருணா மற்றும் கோவில் பணியாளர்கள், திருநறையூர் மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் சக்தி கணபதி, பொன்னழகி அம்மாள், வெற்றிவேல் முருகன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பொன்னழகி அம்மன் தோரணவாயில் குதிரை மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி, ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியில் தீபாராதனை நடத்தப்பட்டது. கடம் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி சாமியாடி, பூசாரி கருப்பசாமி, பூசாரி சின்ன காளை, மாயழகு, ஆறுமுகம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பனையடி கிராம கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது
    அரியலூர்:


    அரியலூர் அடுத்த பனையடி கிராமத்திலுள்ள விநாயகர், சப்தகன்னிகள் மற்றும் கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த விநாயகர், சப்தகன்னிகள், கருப்பு சாமி கோவில்கள் பொதுமக்கள் சார்பில் புனரமைக்கப்பட்டது. மேலும் சாமிசிலைகள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேளதாளம், வாணவேடிக்கையுடன், கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும்நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




    ×