search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ராஜதுரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்
    தேவகோட்டை அருகே மதுபானக்கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருடன் வேலூர் மாவட்டம் துறைபாடியை சேர்ந்த ஜோசப் (36) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலை முடிந்ததும், குருசாமி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மது வாங்கி வர கூறினாராம்.

    பணத்தை மதுபானக்கடையில் கொடுத்த போது, அங்கு விற்பனையாளரான கோட்டைச்சாமி என்பவர் பணத்தை வாங்கி பார்த்ததும், சந்தேகமடைந்து, மதுபானக்கடை ஊழியர்கள் உதவியுடன் ஜோசப்பை பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் கூறினார். 

    இதையடுத்து தேவகோட்டை நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு என்பதும், அதை மதுபானக்கடையில் மாற்ற முயன்றதும் தெரியவந்ததை தொடர்ந்து ஜோசப், குருசாமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
    கொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரை அறையில் பூட்டி சிறை வைத்திருப்பதாக பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

    பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமல் இது பற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கவனத்திற்கு கொண்டுச் சென்றார். உடனே அவர் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்கும் படி அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி கொல்லம் வழுதக்கால் பகுதி போலீசார் பெண் சிறை வைக்கப்பட்ட வீட்டை கண்டுபிடித்தனர்.

    அந்த வீட்டுக்கு பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமலுடன் போலீசார் சென்றனர். அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்றனர். அங்கு சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

    எலும்பும் தோலுமாக மெலிந்து காணப்பட்ட அந்த பெண்ணின் பெயர் லதா. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லதாவை தவிக்க விட்டு சென்று விட்டார்.

    இதனால் லதாவுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லதாவின் சகோதரி அவரை வீட்டின் அருகே உள்ள அறையில் அடைத்து வைத்தார். கடந்த 20 ஆண்டுகளாக லதா அறையிலேயே தங்கி இருந்தார். தினமும் அவருக்கு ஒரு வேளை உணவு மட்டும் ஜன்னல் வழியாக கொடுக்கப்பட்டது.

    இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மீட்கப்பட்ட லதா பத்னாபுரத்தில் உள்ள காந்தி பவனில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட லதாவுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என்று மந்திரி ஷைலஜா கூறினார். இச்சம்பவம் குறித்து பெண்கள் கமி‌ஷன் அளித்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீட்கப்பட்ட லதாவின் மகன் தற்போது செருப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக தம்பதி மீது பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்தவர் கலைச்செல்வி முருகையன் (24). இவர் சிங்கப்பூரில் தனது கணவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை விட்டு கணவர் பிரிந்து விட்டார்.

    எனவே சிங்கப்பூரில் வாழவழி தெரியாத அவர் அங்கு தனக்கு பழக்கமான கணவன், மனைவியிடம் உதவி கேட்டார். அப்போது அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக கலைச்செல்வி மத்திய போலீஸ் டிவிசன் இன்ஸ்பெக்டர் முகமது ரபி, முகமது ஈசாக்கிடம் புகார் கொடுத்தார்.

    எனவே கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதி மீது கலைச்செல்வி கொடுத்தது பொய் புகார் என தெரிய வந்தது.

    அதைதொடர்ந்து கலைச்செல்வி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 வாரங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    பொய் புகார் வழக்கில் கலைச்செல்விக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், சிங்கப்பூர் பணம் 5 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும், எனவே தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும், கலைச்செல்வி கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக, விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார். #Farmer #Nonrepayment #RahulGandhi
    ஜலோர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு முன்பு, ‘நல்ல நாள் வரும்‘ என்ற கோஷத்தை எழுப்பினார்கள். ஆனால், இப்போது ‘காவலாளியே திருடன்‘ என்ற கோஷம்தான் எங்கும் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு 5 ஆண்டுகளும் மக்களுக்கு மோடி அநீதி இழைத்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை ஏழைகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் பணத்தை பறிக்கும் திட்டங்கள் ஆகும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்‘ திட்டம் ஏழைகளுக்கு பலன் அளிக்கும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்படும். ஆண்டுக்கு 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். முதல் 3 ஆண்டுகளில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி பெறத் தேவையில்லை.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக எந்த விவசாயியும் சிறையில் தள்ளப்பட மாட்டார்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #Farmer #Nonrepayment #RahulGandhi 
    வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #LoksabhaElections2019

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது கலெக்டர் மமேஸ்வரி கூறியதாவது:-  மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.

    இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம்.

     


    வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    அப்போது தாசில்தார் வில்சன், தேர்தல் துணை வட்டாட்சியர் தாமேதரன், துணை தாசில்தார் சரவண குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உடன் இருந்தனர்.

    திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    அப்போது, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளனவா? அங்கு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

    இதை தொடர்ந்து புல்லரம் பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து, விழிப்புணர்வுப் பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். #LoksabhaElections2019

    தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேன்கனிககோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் நேற்று தேன்கனிக்கோட்டை வனசரகர் வெங்கடாசலம் மற்றும் வனவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த காய்ந்த செடிகள், மரம் போன்றவற்றில் பரவ தொடங்கியது.

    உடனே வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வருவதை கண்டு மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெட்டமுகிலாளம் அருகே பெல்லட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பசவராஜ் (வயது 39), கிரியப்பா மகன் சிம்மன் (45) ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்கு தீவைத்தது தெரியவந்தது. அவர்களை உடனே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    துபாயில் உடன் தங்கியிருந்த இந்தியரை கொன்ற வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #PakManJailed
    துபாய்:

    துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதன் பின்னர் அந்த பாகிஸ்தானியை உடைமைகளுடன் வெளியேறுமாறு இந்தியர் கூறியுள்ளார்.  இதனால் பாகிஸ்தானியர் அந்த  அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பி வந்த பாகிஸ்தான் நபர் ஆத்திரமடைந்து தனது பையில் இருந்து கத்தியை எடுத்து இந்தியரைக் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  கொலை செய்யப்பட்ட இந்தியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சில் கத்தியால் ஆழமாக குத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், அறைக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ஹோட்டலின் மேற்பார்வையாளர் கூறினார்.

    இச்சம்பவத்திற்கு முன்னதாக மது அருந்தியிருந்ததாகவும், எந்தவித விரோதத்தோடும் கொலை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், விசாரணையின் போது கூறினார்.

    இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்  என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PakManJailed
    நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொமரகவுண்டனூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
    இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #BritishTourist #Prison #Slapping #IndonesiaOfficer
    ஜகர்த்தா:

    இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.  #BritishTourist #Prison #Slapping #IndonesiaOfficer 
    பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார். #Pakistan #IndianFishermen #VKSingh
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:-

    மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.



    பாகிஸ்தான் ஜனவரி 1-ந் தேதி அளித்த அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களின் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. அது பற்றிய தகவலை பாகிஸ்தான் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.

    வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மனைவியை ஏமாற்றிய வாலீத் அல் தப்தாபாய் எம்.பி.க்கு கோர்ட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்ததுள்ளது.
    குவைத் சிட்டி :

    அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் எம்.பி.யாக இருப்பவர் வாலீத் அல் தப்தாபாய். இவர் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் இந்த தகவலை அவர் மனைவிடம் தெரியப்படுத்தாமல் அவரை ஏமாற்றி சுமார் ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் வாலீத் அல் தப்தாபாய் மனைவியை பிரிந்து சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வாலீத் அல் தப்தாபாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலீத் அல் தப்தாபாயுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நாடாளுமன்றத்தை சூறையாடியது மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் ஏற்கனவே வாலீத் அல் தப்தாபாயுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குவைத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார்.
    ×