search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99052"

    • நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பெரியபாப்பி நாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம் கடிதம் எழுதி விட்டு மாயமானார்.
    • பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    நெகமம்,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. மாலையில் பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் மாணவி இல்லை.இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம். நான் நன்றாக படிப்பேன். நன்றாகவே இருப்பேன்.

    என்னை காணவில்லை என கூறி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டாம் என எழுதி இருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. திரும்ப, திரும்ப அழைத்தும் எடுக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாகவும், இதனால் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவி உசிலம்பட்டி தான் சென்றிருக்கிறாரா? அல்லது வேறு எங்காவது சென்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.

    • மல்லப்பனும், அவரது மனைவியும் மகளுன் தங்கி இருந்தனர்.
    • மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், அப்பர் தெருவை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்தார். திடீரென அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மல்லப்பன் மனைவி ராமலட்சுமி, சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு ஆகும். அவரது மகள் கோவையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். இதனால் மல்லப்பனும் மகளுடனே தங்கியிருந்தார். இந்தநிலையில் தான் அவர் திடீரென மாயமாகி விட்டார். இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • திருச்சியில் 2 இளம்பெண்கள் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சி,

    திருச்சி தென்னுார் சின்னசாமி நகர்,அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் சீலன். இவரது மகள் ஜாஸ்மின் ( வயது 18) சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜாஸ்மின் கடைவீதிக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாய் செல்வி தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாஸ்மீனை தேடி வருகின்றனர்.இதேபோன்று திருவா னைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லாவண்யா (வயது 27) சம்பவத்தன்று வீட்டில் இருந்த லாவண்யா தாய் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறிய சென்றவர் அங்கு செல்லவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் பாலமுருகன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.இதை யடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

    • கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்பர் தெருவை சேர்ந்த குகன் மகள் ஹரிப்பிரியா(வயது21).இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிப்பிரியா கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் ஹரிபிரியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அவரது தந்தை குகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.



    • கடந்த 26-ந் தேதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வரை தேடிவருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி திவ்யா (வயது35). இவர் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு திவ்யா வெளியே சென்றார். ஆனால் மாலையில் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் நாகராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடிவருகின்றனர்.

    இதேபோல் ஓசூரை அடுத்த பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அகல்யா (20). இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது கணவர சந்திரசேகர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை மகுனூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி ஆஷா (22). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 27-ந் தேதி மீண்டும் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆஷா திடீரென்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ரஷீத் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆஷாவை தேடிவருகின்றனர்.

    • குளித்தலையில் வீட்டில் இருந்த பள்ளி மாணவி மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, மாயனுார், கீழ மாயனூரை சேர்ந்த, 'சென்ட்ரிங்' தொழிலாளியின், 16 வயது மகள், அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 28ந்தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    • மாணவி மாயமானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகேயுள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்த 17 வயதுடைய பெண் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அரசு இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்கு மார்(33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனை விக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேஷ்குமார் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடையார்பாளையத்தில் இளம் பெண் மாயமானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் பார்கவி(வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பார்கவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவரது தாய் கோமதி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
    • பாட்டி வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பச்சனப்பட்டியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை நாள் என்பதால் சம்பவத்தன்று கமலாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் அவர் கிடைக்காததால் மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் தாயார் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,மே.25-

    கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை.

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளியூரில் கூலி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி சுமித்ரா (வயது 22). இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் தர்ணிஷ் என்ற குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மணிகண்டன் இண்டூர் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுமித்ராவையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • கணவனிடம் அப்பா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சுஜி காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மகேந்திர மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி சுஜி (வயது 19). இருவரும் கடந்த கடந்த 1 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 1 வயதில் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று சுஜி தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்ததால் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனையடுத்து கணவனிடம் அப்பா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சுஜி காணவில்லை. பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சந்தோஷ் மகேந்திர மங்கலம் போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுஜியை தேடி வருகின்றனர்.

    ×