என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99052"
- இளம்பெண் திடீரென மாயமானார்.
- ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (வயது19). வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமானார்.
கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அப்போது கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி என்பவருடன் தங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுகனூர் அருகே கல்லூரி விடுதியில் இருந்து மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
சிதம்பரம் கே தென்பதி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகள் தமிழரசி (வயது 21). இவர் சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.இந்த நிலையில் விடுதியில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து விடுதி வார்டன் மாணவியின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சிவக்குமார் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாயமான மாணவி தமிழரசி அதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்தவரும் நந்தா என்கிற நந்தகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மாணவருடன் தமிழரசி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பதி:
பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.
பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.
நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
- இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
- பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மதுரை
மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.
சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி மாயம் ஆனார்
- பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்
கரூர்:
கரூர் தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதி கோழிக்கார தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கார்த்திகா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் பெற்றோர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த கார்த்திகாவை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகாவின் தாய் இளவரசி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கார்த்திகாவை தேடி வருகின்றனர்.
- வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல்அமீது. இவரது மகள் ஹர்வின்பானு (வயது 18). இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். ஹர்வின்பானு நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் ஹர்வின்பானு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சாகுல்அமீது பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று காரிமங்கலம் அருகே புதூர் குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் இந்திராணி (18). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 15-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்ைல. இதுகுறித்து மாணவியின் தாய் தமிழ்செல்வி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
- வீட்டில் இருந்த கல்லுாரி மாணவி மாயமானார்
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த, பாலவிடுதியை சேர்ந்தவர் இளையராணி (வயது 50). இவரது மகள் கார்த்திகா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் ெசாந்த ஊருக்கு கார்த்திகா வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த கார்த்திகா திடீரென மாயமானார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் இளையராணி கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை:
கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.
இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.
மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- மதுரை அருகே பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
- சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் அறிவ ழகன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது15) மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் இருக்கும் வி.கள்ளப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தார். சம்பவத்தன்று உசிலம் பட்டியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் அதன்பிறகு பிரியதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாயமான அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் ராஜாஅமராவதி(19). பேஷன் டிசைனிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் ேதடிப்பார்த்தும் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்ைல.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.
- வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை.
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது37). இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவுதா (32) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி தனது வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து பவுதா பெரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல் பெரும்பாலை அருகே கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்த சீனு. இவரது மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு கடந்த 6 மாதங்களாக செம்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து பிரியாவின் தந்தை முருகேசன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பிரியாவை தேடி வருகின்றனர்.
- சாந்தினிக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் வன்னி மரத்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சாந்தினி (வயது 27). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சாந்தினிக்கும், ஆர்.வி.புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொண்டு வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தினி தனது வருங்கால கணவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அப்போது அவரது தந்தை நானே கொண்டு சென்று விடுகிறேன் என்றார். ஆனால் அவர் வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன் என்று கூறினார். பின்னர் சாந்தினி தனது தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் அவரை அவரது வருங்கால கணவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பிய சாந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து சாந்தினியின் தந்தை வடக்கிப்பாளையம் போலீசில் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்