என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "student kidnapping"
- கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.
அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்த உறவினர்கள்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் வந்த வாசியில் உள்ள தனியார் கல் லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். இந்தநிலை யில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது மாணவி அங்கு இல்லை. பின்னர் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
வந்தவாசியை அடுத்த வீரம் பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தங்களது மகளுடன் பேசி வந்த நிலையில் அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதி மாணவியின் பெற் றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த வாலிபர் வீட்டில் இல்லாததால் சந்தே கம் அடைந்த அவர்கள் அங் கிருந்தவர்களிடம் கேட்ட போது சரியான தகவல் கூற வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவி னர்கள் அவர்களுடன் தக ராறு செய்தனர். பின்னர் வாலிபரின் குடிசை வீட்டுக்கு திடீரென தீ வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது மாணவியின் உறவினர்களில் சிலர் உடனே தீயை அணைத்த னர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியதால் அக்கம் பக்கத் தினர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசை வார்த்தை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார்.
- பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். அவரது மகள் சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார் இவர்கடந்த 28-ந்தேதி நர்சிங் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சினேகாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை
எனவே இதுகுறித்து பண்ருட்டி போலீசில் தாயார் அன்னக்கிளிபுகார் செய்தார். புகார் மனுவில் நர்சிங் பள்ளிக்கு சினேகா செல்லும் போது எல்.என். புரம்,அய்யனார் கோவில் வழியாக செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்தசரண்ராஜ் (22)பழக்கம் ஏற்பட்டு உள்ளது.எனவே சினேகாவை சரண்ராஜ் அழைத்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார் இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சினேகாவை தேடி வருகின்றனர்.
- நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர்.
- புதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடியை சீனிவாசன் நகரை சேர்ந்தவர்முருகப்பன்-கஸ்தூரிதம்பதியினர்.இவர்களது மகள் கோமதி (வயது 15). இவர் புதுப்பேட்டை பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர். கோமதிவீட்டி ல்தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைசேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் கோமதியை மயக்கி ஆசைவா ர்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றிபுதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்த குமார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவி கோமதியை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகி றார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் தனி யாக இருந்துள்ளார். இதை அறிந்த மாணவியுடன் படிக்கும் விழுப்புரம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சக மாணவன் பால முருகன் நேரடியாக மாண வியின் வீட்டிற்கு வந்து மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மாண வியின் பெற்றோர் வீட்டில் மாணவி கடத்திச் செல்ல ப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவியின் தந்தை இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து மாணவி மற்றும் மாணவியை வீடு புகுந்து கடத்திச் சென்ற பாலமுரு கனை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை புது தெருவை சேர்ந்தவர் குணா, ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 14). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை குணா, சுரேந்தரை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்து சென்றார். பள்ளி முன்பு சுரேந்தரை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சுரேந்தர் பள்ளிக்கு செல்லாமல் அவனது நண்பர் கோகுல் வீட்டிற்கு சென்றுள்ளான்.
நாச்சிக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே நடந்து செல்லும் போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரேந்தரின் வாயில் துணியை அமுக்கி உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே உள்ள தென்னை தோப்பிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
இதனிடையே அந்த வழியாக பொதுமக்கள் சிலர் வரவே, மர்மநபர்கள் அங்குள்ள புதர்பகுதியில் மறைந்து கொண்டனர். இதையடுத்து சுரேந்தர் சுதாரித்து செயல்பட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். மேலும் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தை தெரிவித்துள்ளான். உடனே குணா அங்கு சென்று சுரேந்தரை மீட்டார்.
மேலும் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்மகும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யார், எதற்காக சுரேந்தரை கடத்தினார்கள், குணாவின் எதிராளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கறிகோழி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வகுமாரி ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் ராகவி (வயது 12), துழாரங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ராகவி இரவு 7 மணி அளவில் தெருவில் தனது தம்பி மற்றும் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராகவியுடன் பேச்சுக்கொடுத்தனர். பின்னர் அவரிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகிலுள்ள கடைக்கு அழைத்து சென்றனர். மிகவும் அக்கறையுடன் பேசியதால் அவர்களை நம்பி ராகவியும் மோட்டார் சைக்களில் ஏறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இரண்டு நபர்களும் வாகனத்தை பின் தொடர்ந்து நடந்து சென்றனர். அப்பகுதியில் இருந்த கடையை தாண்டி நிற்காமல் சென்றதால் ராகவி அதிர்ச்சி அடைந்தார்.
இதைப்பார்த்த ராகவியின் தம்பியும், தோழியும் கூச்சல் போட்டனர். பின்னர் பெற்றோரிடம் சென்று கூறினர். உடனடியாக ராகவியின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் துரத்தினர். மக்கள் துரத்துவதை பார்த்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்து மறைந்து விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடையார்பாளையம் போலீசார் அருகில் உள்ள தா.பழூர், வி.கைகாட்டி காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் மணகெதி கிராம பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் சென்று ராகவி மீட்டனர். போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை மற்றும் ஆங்காங்கே ரோந்து பணியை தீவிரப்படுத்தியதையும், பொதுமக்கள் தேடுவதையும் அறிந்த மர்ம நபர்கள் ராகவியை இறக்கி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து மாணவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் ராகவியை கடத்திய மர்ம நபர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இடையார் கிராம பொதுமக்கள் கடத்தல்காரர்களை விரைந்து பிடிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் உடையார்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் தலைமையில் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. #tamilnews
உசிலம்பட்டி அருகே உள்ள எரவார்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் சரண்யா (வயது16), 9-ம் வகுப்பு மாணவி.
இவர் பள்ளிககு சென்ற போது பொம்மம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கேலி செய்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை சரண்யா நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தாயாருடன் சரண்யா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ரஞ்சித் உள்பட சிலர் அங்கு வந்து அவரை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் குபேந்திரன் புகார் செய்தார். அதில் சரண்யாவை திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், அவரது தந்தை மாயி, தாய் லிங்கேஸ்வரி, உறவினர்கள் இளஞ்சியம், சரத், சரண், ராசு, ஆதி, ஜெயராமன், கலா, போதுமணி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்