என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனு"
- குட்டிகுளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகிறது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது குட்டி குளம். இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது.
இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
- தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
- பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர் :
பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அவினாசிபாளையம் பகுதியில் செல்வக்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார், செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாரை பதிவு செய்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
- கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
- அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் குமார், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கோபால், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், நடராஜ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் உள்ளிட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பொங்கலூர் ஊராட்சியில் செல்வக்குமார் என்பவர் வீட்டின் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்வக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணை தலைவர் மீது அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுதுறை அதிகாரிகள் மீது எந்தவித விசாரணையும் இன்றி வழக்குப்பதிவு செய்ததை கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
- பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
- கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பி னராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்க வேண்டும்.
பயிர்கடன் தனிநபர் ரூ.1.6 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550, பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550 ஆக மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும்.
மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110-க்கு பங்கு தொகை மற்றும் நுழைவு க்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர் 73387 21201 என்ற எண்ணிற்கு அல்லது நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளர் 90879 46937 என்ற எண்ணிற்கோ அல்லது துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் 90800 15003 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோழியை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
- மாற்றுத் தொழிலாக கறிக்கோழி வளா்ப்பு தொழில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தாராபுரம் :
தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் முட்டை கோழி உற்பத்தி மற்றும் கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, அருகில் உள்ள வீடுகளில் வசிப்போா் பாதிக்கப்படுவதாகவும் கூறி, 2 நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையை முற்றுகையிட்டும், கோழியை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்தும், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சின்னக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது : விவசாயம் பொய்த்துப் போன எங்கள் கிராமப் பகுதிகளில் மாற்றுத் தொழிலாக கறிக்கோழி வளா்ப்பு தொழில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.கோழிப் பண்ணை கழிவுகளில் இருந்து கிடைக்கும் இயற்கை உரத்தை விவசாயத்திற்கு தயாா்படுத்தி வருகிறோம். கோழி பண்ணைகள் எங்கள் பகுதியைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்களுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருவதால் நாங்கள் சிரமமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த கோழிப் பண்ணையில் இருந்து துா்நாற்றமும், காற்று மாசும் ஏற்படவில்லை.எனவே எங்களது கிராமப்பகுதிகளில் கோழிப்பண்ணைகளை தொடா்ந்து நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
- மேற்குரத வீதியில் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.
நெல்லை:
பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோவிலில் மேற்கு ரத வீதியில் உள்ள ஆன்மீக மண்டபங்களில் வழிபாடு நடத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் மேற்கு ரத வீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த பகுதியில் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு விக்கிரமசிங்கபுரம் ஊர் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு கதவு அமைக்கும் பணியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விக்ரமசிங்கப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மனு சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாபநாச சுவாமி கோவிலின் மேற்கு ரத வீதியை பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். திடீரென நிர்வாக காரணங்கள் கூறி இந்து அறநிலையத்துறை இரும்பு கதவு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
23 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் கோவிலின் பூஜைகள் தவறாமல் செய்து வந்தும், கோவிலை தூய்மையாகவும் பராமரித்து வருகிறோம். மேற்குரத வீதியில் இரும்பு கதவு பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விக்கிர மசிங்கபுரம் பொதுமக்கள் கூறியதாவது:
மேற்குரத வீதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. தினசரி இந்த வீதி வழியாக இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திடீரென இரும்பு கதவு அமைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக அவர்கள் கொண்டு வந்த பாதாகைளை கலெக்டர் அலுவலக்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவற்றை பறிமுதல் செய்தனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும்.
- மென்மையான கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் கோட்டத்தி ற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கும்பகோணம் மற்றும் திருப்பனந்தாள் வட்டார அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023 - 24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் மாவட்ட துணை தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
மனுவில் வேலை பெற விரும்பும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் மற்றும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும்.
அதேபோல மென்மையான கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தின கூலியாக ரூபாய் 294 குறையாமல் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் கும்பகோணம் மாநகர தலைவர் பாரூக், பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் கும்பகோணம் ஒன்றிய தலைவர் காமாட்சி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் மகேஸ்வரி, திருப்பனந்தாள் ஒன்றிய ராமலிங்கம், பாலமுருகன் ஆகிய உட்பட பலர் பங்கேற்றனர்.
- திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சௌந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், ருக்மணி சேகர், விஜயலட்சுமி, சுகன்யா ஜெகதீஷ், பாமிதா கயாஸ், சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்ட 10 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 30ந்தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 20ன் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தற்போது தெரிய வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கு மிக அவசரம் காட்டியது, ஒப்பந்ததாரரின் உரிய விபரங்கள் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளதால், இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எனவே நகராட்சி நிர்வாகம் சட்ட விதி 164ன் படி பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்து மீண்டும் நகர் மன்ற கூட்டத்தை நடத்தி அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, உரிய விளக்கம் அளித்து பின்னர் நிறைவேற்றலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
- மாணவி ஒருவருக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நட வடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 மாணவிக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
- இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 242 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும்.
- வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில்,
நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன், ராஜே ந்திரன் தலைமையிலான காங்கிரசார் அளித்த மனுவில் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் நிலையில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்த ப்பட்டதால் மீண்டும் பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படை வார்கள். எனவே தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விழுப்புரம் நகரத் தலைவர் ஹரிபாபு, நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, வி. ஆர். பி. பள்ளி தாளாளர் சோழன், தண்டபாணி, சங்கர் பிரகாஷ்,கேபிள் பார்த்திபன், இசைமாறன், திருமலை ,செல்வ முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்