search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple lands"

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    • மைவாடி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 14.39 ஏக்கர் புஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன.
    • கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

    உடுமலை:

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத துறை, திருப்பூர் மண்டல இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் உதவி ஆணையர் ஜெயதேவி (கூடுதல் பொறுப்பு) தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் மகேஸ்வரன் (ஆலய நிலங்கள்), சரக ஆய்வர் சரவணக்குமார், கோவில் தக்கார் அம்சவேணி, நில அளவையர் நிஷாந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கடத்தூர் சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.53 ஏக்கர் நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும்.

    அதுபோல மைவாடி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 14.39 ஏக்கர் புஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும் கொழுமம் தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான உடுமலை தாலுகா கல்லாபுரம் கிராமத்தில் உள்ள 2.48 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டது. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    இவ்வாறு மடத்துக்குளம் பகுதியில் மொத்தம் ரூ.8 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்த இடங்களில் கோவில் நிர்வாகங்களின் சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    அதுபோல் அனிக்கடவு கிராமம் சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    • சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக 900 ஏக்கா் நிலம் உள்ளது.
    • முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக காங்கயம் வட்டாரத்தில் 900 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் சிவன்மலை சுற்றுப் பகுதியில் மட்டும் 233 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில் காங்கயம் அருகே நீலக்காட்டுபுதூா் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அதிகாரிகள் 2022ம் ஆண்டு அளவீடு செய்தனா்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் தற்போது அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நடுவதற்கு சிவன்மலை முருகன் கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, கண்காணிப்பாளா் பால்ராஜ், நில அளவையாளா்கள் கிருஷ்ணகாந்த், பிரதீஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

    அப்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருபவா் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் முன்னறிப்பின்றி வந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், கல் நடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் கல் நடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினா்.

    இதையடுத்து கோவில் உதவி ஆணையா் அன்னக்கொடி, காங்கயம் காவல் ஆய்வாளா் காமராஜ் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இப்பிரச்னை தொடா்பாக வருவாய் வட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    கோவில் மனைகளில் குடியிருப்பவர்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வேண்டும் என குடியிருப்புதாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    திருத்துறைப்பூண்டி:

    தமிழக முதல்வருக்கு கோவில்மனை குடியிருப்புதாரர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பி.வி.சந்திரராமன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் காலம் காலமாக வீடுகட்டி  குடியிருந்து வருகின்றனர்.
    அந்தக் குடியிருப்பு மனைகளுக்கு பழைய காலத்திலிருந்தே கோவிலுக்கு ஒரு பகுதி வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் அந்த தொகையை செலுத்த இயலாமல் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் திணறி வருகின்றனர்.
    எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு கோவில் மனைகளுக்கு நியாயமான பழைய பகுதி முறையையே நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    • மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது.
    • நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்டு எல்லைக் கற்கள் நடும் பணியை அறநிலையத் துறை புதன்கிழமை தொடங்கியது. வெள்ளக்கோவிலை அடுத்த மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 520 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க, நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரன், செயல்அலுவலா் சு. இராமநாதன், திருக்கோயில் எழுத்தா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்கட்டமாக வெள்ளக்கோவில் கிராமம் கணபதிபாளையம், சுப்பிரமணியக்கவு ண்டன்வலசு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 ஏக்கா் நிலங்களை மீட்டு அந்த இடத்தில் எல்லைக் கற்களை நட்டுள்ளனா்.

    இதேபோல கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."

    • தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்பு
    • கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் தேவராய சமுத்திரம் ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ சிவன் கோவில்,ஸ்ரீ பொன்னாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பட்டத்தரசி செல்லாண்டியம்மன் கோவில் ,ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆகிய கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கக்கோரி இந்து சமய அறநிலைத்து றைக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி நேற்று கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

    ×