search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.

    அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்தலை-பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை நடைபெற உள்ளது.
    • கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பூர் :

    குளித்தலை - பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுன் - திருச்சி டவுன் செல்லும் ரெயில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரெயில் நாளை பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இதுபோல் திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், திருச்சியில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காட்டை இரவு 8.25 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் நாளை திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. கரூரில் இருந்து பாலக்காடு வரை ரெயில் இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
    • ஒருவர் எதிர்பாராத விதமாகரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு பேட்டையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், பலியானவர் பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் பலியானவர் நடுக்கல்லூர் ரெயில்வேபீடர் ரோட்டை சேர்ந்த பகவதி (வயது 40) என்பது தெரியவந்தது. கூலி வேலை செய்து வந்த இவருக்கு சொர்ணம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பகவதி இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அங்கு சென்றிருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் மோதி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நிற்கும்.

    கோவை,

    கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரெயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயிலில் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர்.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. ரெயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது.

    இந்த நிலையில் கோவை-திருப்பதி இடை யே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரெயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

    திருப்பதி-கோவை ரெயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.

    இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
    • தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    ஓங்கோல்:

    ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது.

    பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது.

    அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிறகு அந்த ரெயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    • ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    திருச்சி:

    திருச்சி-சென்னை ரெயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே கடந்த 1-ந்தேதி இரவு தண்டவாளத்தில் குறுக்கே இரண்டு லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நள்ளிரவு இந்த வழியாக சென்னை நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியதில் என்ஜின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பழுது ஏற்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விருதாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதிச்செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக சம்பவம் நடந்த இடத்தில் ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அந்தப் பகுதியில் யார் யாருடைய செல்போன் நம்பர்களின் சிக்னல் காண்பித்ததோ அவர்களையும், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
    • 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.

    • தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
    • ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நலச்சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், பொருளாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜன், சாகுல் ஹமீது, முருகானந்தம், முகமது அலி ஜின்னா, முகமது மைதீன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் தில்லைவி ளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், பகல் நேரத்தில் செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரசுக்கு காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை, தில்லைவி ளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக இருமுனைகளில் இணைப்பு ரெயில் விட வேண்டும்.

    தில்லைவிளாகம் ரெயில் நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். சாலை வரை தார்சாலை வேலையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    ரெயில் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.

    • தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
    • பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    கோவை,

    தூத்துக்குடி-கோவை இடையே ெரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.

    ெகாரோனாவுக்கு முன்பு வரை தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ெரயில், வாஞ்சி மணியாச்சி ெரயில்நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ெரயிலுடன் இணைத்து இயக்கப்பட்டு வந்தது.ெகாரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ல் நாடு முழுவதும் பல்வேறு ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதில், இந்த ெரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    ஆனால், நிலைமை சீரானபிறகு இந்த ெரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, இந்த ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போத்தனூர் ெரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாரம் மும்முறை ெரயில் இயக்க ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது: துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து நிறைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கோவை, திருப்பூர், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் பல பொருட்கள் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, சரக்குகளை ஏற்றிச்செல்ல இந்த ெரயில் பயனுள்ளதாக இருக்கும், கடல் மீனுக்கான சந்தை வாய்ப்பு இங்கு உள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து இரவில் மீன்களை ெரயிலில் ஏற்றி அனுப்பினால், காலையில் அவை இங்கு வந்து சேர்ந்து விடும். இதனால் வியாபாரிகள் பயன்பெறுவர். நீலகிரியில் விளையும் பல்வேறு காய்கறிகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லவும் இந்த ெரயில் பயன்படும். பயணிகளைப் பொருத்தவரை, திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வரமுடியும்.

    தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பஸ்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கும் இந்த ெரயில் பயன்தரும். மேட்டுப்பாளையத்துக்கு நேரடியாக இந்த ெரயிலை இயக்கும்போது, தென் மாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரி வந்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன.
    • ‘பின்வாங்கிய’ இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

    திருவனந்தபுரம் :

    வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் கேரள மாநிலத்தில் நடந்திருக்கிறது.

    அங்கு சோரனூரை நோக்கி வேனாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் சென்றது.

    காலை 7.45 மணியளவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செரியநாடு என்ற சிறிய ரெயில் நிலையத்தை நோக்கி வந்த அந்த ரெயில், வழக்கமான நிறுத்தமான அந்நிலையத்தில் நிற்காமல் கடந்துவிட்டது. அங்கு அந்த ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் திகைத்தனர்.

    டிரைவர் தனது தவறை உணர்ந்தபோது சுமார் 1 கி.மீ. தூரம் தாண்டிவிட்டது. அதன்பிறகு நிறுத்திய அவர், ரெயிலை 'ரிவர்சில்' கொண்டுவந்து பயணிகளை ஏற்றிச்சென்றார்.

    இந்தக் குழப்பத்தால் ஏற்பட்ட நேர இழப்பை, ரெயிலை விரைவாக இயக்கி சரிக்கட்டிவிட்டார் என்ஜின் டிரைவர். சோரனூர் ரெயில் நிலையத்தை சரியான நேரத்தில் சென்றடைந்துவிட்டது அந்த ரெயில். அதனால், 'பின்வாங்கிய' இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இதுகுறித்து என்ஜின் டிரைவரிடம் ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

    'பெரிய ரெயில் நிலையங்களில்தான் சிக்னல்கள் இருக்கும். செரியநாடு ஒரு சிறிய ரெயில் நிலையம் என்பதால் அங்கு சிக்னல் இல்லை. அதனால் என்ஜின் டிரைவர் கவனக்குறைவாக அந்த நிலையத்தை தவறவிட்டு சென்றிருக்கலாம். சுமார் 700 மீட்டர் வரை அந்த ரெயிலை பின்னோக்கி இயக்க வேண்டி வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட 8 நிமிட நேர இழப்பை அந்த என்ஜின் டிரைவர் பின்னர் சரிசெய்துவிட்டார்' என்று ஒரு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

    இதே போன்றதொரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. அப்போது 'பிரேக்' செயலிழந்ததால் ஒரு ஜன சதாப்தி ரெயிலை நிறுத்த முடியவில்லை. பயணிகள் பீதி அடைந்த நிலையில் ஒருவாறு ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர், பின்னர் சுமார் 20 கி.மீ. தூரம் ரெயிலை பின்னால் இயக்கி குறிப்பிட்ட நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்.

    • ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×