search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dies"

    • தூத்துக்குடியை சேர்ந்தவர்
    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி 6 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 20-ந் தேதிதூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிச்செல்வம் (வயது 25) என்பவர் சமையலராக வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில் அவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவின்றி கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருந்தனர். அதற்குள் மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி பள்ளிகொண்டா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார்.
    • கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (42). இவர் மரம் ஏறும் கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அ.தி.மு.க. ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலையில் சிக்கி இறந்து கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மாறிய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). மரம் வெட்டும் தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி செல்வராஜ் காகனம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வலையை எடுத்து சென்றார்.

    ஏரியில் மீன் பிடிக்கும் வலையை போட்டு விட்டு காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது வலையில் கால் சிக்கிக் கொண்டது. பின்னர் தண்ணீரில் மூழ்கி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர் செல்வராஜ் தண்ணீரில் பிணம் மிதப்பதாக கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதுகுறித்து செல்வராஜின் மகன் ஜீவா மோரணம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை ஏரியில் இருந்து மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி தங்கத்தின் மகன் கோகுல்நாத் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் கொள்ளை கொட்டாயை சேர்ந்தவர் வேலு (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 30 ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அதிலிருந்த ஒரு ஆடு திடீரென அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்றுவதற்காக வேலு கிணற்றில் குதித்தார்.

    அப்போது கிணற்றின் மூழ்கி பக்கவாட்டில் மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். வேலு கிணற்றில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். முடியாததால் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர்.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி கைவிடப்பட்டது. மேலும் அதிகாலை தீயணைப்புத் துறையினர் வந்து சிறிது நேர தேடலுக்குப் பிறகு வேலு உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது50) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு அரங்கல்துருகம் ஊராட்சி பகுதியில் உள்ள தனது அக்காள் புஷ்பா வீட்டிற்கு சென்றார்.

    அவர் வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கட்டிலிருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும் 2 பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளது.

    • பஸ்சில் இருந்து கீழே இறங்கிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) தொழிலாளி. இவர் நேற்று இரவு சோளிங்கரிலிருந்து வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.

    பஸ் புதிய பஸ் நிலையத்தில் நின்ற போது கீழே இறங்கினார். அப்போது குடியாத்தத்தில் இருந்து வந்த தனியார் பஸ் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சை ஒட்டியபடி வந்தது.

    இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணமூர்த்தி 2 பஸ்களுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் அருகே உள்ள பலபநத்தம் கிராமம் பூசாரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்( வயது 47). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஆலங்காயத்தில் இருந்து வீட்டிற்கு தனது பைக்கில் சென்றார். அப்போது நரசிங்கபுரம் கங்கையாம்மன் கோவில் அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி சாலையின் ஓரம் உள்ள ஒரு புளிய மரத்தில் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் குமரேசன் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் உடனடியாக குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் அண்ணா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), பீடி சுற்றும் கூலி தொழிலாளி. நேற்று இரவு ஆற்காடு, மேல்விஷாரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அந்த நேரத்தில் சுப்பிரமணி கீழ்விஷாரம் மாரியம்மன் கோவில் அருகே சைக் கிளில் சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து சுப்பிர மணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கழிவுநீர் கால் வாயில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல்விஷா ரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் மழை யையும் பொருட்படுத்தாமல் கீழ்விஷாரம் அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஊராட்சி சார்பில் பேவர் பிளாக் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பேவர் பிளக் கற்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கற்களை அங்கிருந்து முருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி உள்ளனர். டிராக்டரை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார்.

    கற்களை ஏற்றி கொண்டு வெளியே வரும் போது கோவில் தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூண் கீழே படுத்துக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி கந்தசாமி (45) என்பவர் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக கந்தசாமியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.

    • விவசாயி கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி மகன் ராகுல் (வயது 22).

    கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த மையா என்கிற மகேந்திரன் (61) என்பவர் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட் டிரான்ஸ்பார்மரில் பழுதைசரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

    இதைக் கண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த ராகுலின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது குறித்து ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்த னர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த பகவந்தபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35).கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஜயன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×