search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker knife attack"

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழிலாளியை வாலிபர் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 50), தீர்த்திகிரி (52) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தனர். அரசு கழிவறைகள் கட்டும் பணியில் ஒன்றாக ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று முருகன் கட்டிட வேலைக்கு செல்லாமல் வெள்ளக்குட்டையில் கட்சி கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட தீர்த்தகிரி அவரை தட்டிக் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆண்கள் வார்டில் தனிதனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை தீர்த்தகிரியை பார்க்க அவரது மகன் மோகன் (24) வந்தார்.

    தந்தையை பார்த்து விட்டு ஆத்திரமடைந்த அவர் ஆண்கள் வார்டில் புகுந்து படுக்கையில் படுத்திருந்த முருகனை கத்தியால் வெட்டினார். அவரது தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் கூச்சலிட்டனர். இதனால் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த முருகனுக்கு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் புகுந்து தொழிலாளி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை முருகனின் உறவினர்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் செய்தனர். தப்பி ஓடிய மோகனை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர்.

    இதனால் ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    ஈரோடு அருகே வாய்தகராறில் கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஓடப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 24) கூலித் தொழிலாளி.

    இரவு நேரத்தில் அந்தபகுதியில் உள்ள மதுகடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஜீவானந்தம் நகரை சேர்ந்த பெயிண்டர் ரவீந்திரன்(வயது 33) என்பவரும் வந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.

    தகராறு முடிந்து காஜா முகைதீன் தனது வீட்டுக்கு போய்விட்டார் எனினும் அவரை தொடர்ந்து ரவீந்தரனும் சென்றார். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் காஜா முகைதீனுக்கு கை, தொடை பகுதியில் கத்தி குத்துகள் விழுந்தது. ரத்தக் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி ரவீந்தரனை கைது செய்தனர்.

    ராஜபாளையத்தில் முன் விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தோழ ராயபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 32) கூலித்தொழிலாளி. இவருக் கும், கீழ ஆவரம்பட்டியைச் சேர்ந்த கடல்கனி (50) என் பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பஞ்சு மில் மார்க்கெட் அருகே பால்பாண்டி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கடல்கனியின் மருமகன் ராஜூ (26) அங்கு வந்தார். அவர், பால் பாண்டியை வழிமறித்து தகராறு செய்தார்.

    இதில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரம் அடைந்த ராஜூ, மறைத்து வைத்திருந்த கத்தியால் பால் பாண்டியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த பால் பாண்டி சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை யங்கோட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு செல் லப்பட்டார்.

    இது குறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து ராஜூவை தேடி வருகிறார்.

    சங்கரன்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பத்தன்று இவர் சங்கரன்கோவிலில் நடைபெற்று பெரும் ஆடித்தவசு திருவிழா மண்டகப்படி நிகழ்ச்சிக்கு வந்தார்.

    அங்கு நடைபெற்ற பாட்டுகச்சேரியின் போது இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தளவாய்புரத்தை சேர்ந்த திருமலைக்குமார் (24) என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே செல்போனில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருமலைக்குமார் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் வீரிருப்புக்கு சென்றார். அங்கு வீரிருப்பு பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த மணிகண்டனிடம் தகராறு செய்த அவர்கள் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலைக்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    திண்டுக்கல்லில் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது40). கிழக்கு ரத வீதியில் கண்ணாடி கடை வைத்துள்ளார். இவர் தனது குடும்ப தேவைக்காக குமரவேல் என்பவரிடம் கடனாக பணம் வாங்கி இருந்தார். அதனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது. நேற்று மாலை முத்துப்பாண்டி தனது மனைவி காளீஸ்வரியுடன் மகன் தாமோதரன் பிறந்த நாளை முன்னிட்டு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது அங்கு வந்த குமரவேல் (29), அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய 2 பேரும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத உனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா? என கேட்டு சத்தம்போட்டனர். மேலும் பூக்கடையில் இருந்த கத்தியை எடுத்து அவர் தலை மற்றும் முதுகில் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி மயங்கி விழுந்தார். அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நகர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முப்பிடாரி வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர். மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    ×