இது புதுசு

ரூ. 1 கோடி விலையில் பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-08-26 11:17 GMT   |   Update On 2022-08-26 11:17 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X7 காரின் ஸ்பெஷல் எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
  • புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 40i ஜாரெ M எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ X7 ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பிஸ்போக் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பெரிய கிட்னி கிரில், கிளாஸ் பிளாக் பினிஷ், முன்புறம் மற்றும் பின்புறம் M சின்னம் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் மினரல் வைட் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய X7 மாடலில் 21 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் உள்ளன. இத்துடன் M அக்சஸரீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.


பிஎம்டபிள்யூ X7 40i 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இத்துடன் எபிஷியண்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் என மூன்று விதமான டிரைவ் மோட்களை இந்த கார் வழங்குகிறது. இவை கார் என்ஜினின் சேசிஸ், ஸ்டீரிங் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவைகளின் செயல்திறனை ஆல்டர் செய்கிறது.

Tags:    

Similar News