இது புதுசு

புதிய XUV300 டீசர் வெளியிட்ட மஹிந்திரா

Published On 2022-08-23 11:48 GMT   |   Update On 2022-08-23 11:48 GMT
  • மஹிந்திநரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய XUV300 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த கார் சக்திவாய்ந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய மேம்பட்ட மஹிந்திரா XUV300 எஸ்யுவி-க்கான டீசரை வெளியிட்டு உள்ளது. வெளிப்புறம் இந்த கார் சிறிதளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சப்-4 மீட்டர் எஸ்யுவி-யான மஹிந்திரா XUV300 தோற்றத்தில் புதிதாக காட்சியளிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக காரின் முன்புறம் வழங்கப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா நிறுவன லோகோ தெரிகிறது. இந்திய சந்தையின் சப்-4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் அதிக போட்டி நிறைந்து இருக்கும் நிலையில், மஹிந்திரா தனது XUV300 மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.


இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய XUV300 மாடலின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என்றே தெரிகிறது. இந்த காரில் சற்றே வித்தியாசமான பாக் லைட் ஹவுசிங், பெரிய அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வைட் நிற ரூஃப் மற்றும் புதிய ஷேட் ரெட் நிறம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய XUV300 மாடலில் 1.2 லிட்டர் T-GDI டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. தற்போதைய மாடலில் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Tags:    

Similar News