கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டி- இந்திய ஆடும் லெவனில் இடம் பிடிக்க 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி

Published On 2022-09-20 07:22 GMT   |   Update On 2022-09-20 07:22 GMT
  • 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
  • ஆசிய கோப்பையில் ரிஷப்பண்ட் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை.

மொகாலி:

20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

அதன்படி ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையில் மோசமாக ஆடியது. இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. அதை ஈடு செய்யும் வகையில் ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

விக்கெட் கீப்பர்களான ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர்தான் அணியில் இடம்பெற முடியும். ஆசிய கோப்பையில் ரிஷப்பண்ட் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் இடம்பெறுவாரா? அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல வேகப்பந்து வீரர்களில் புவனேஷ்வர் குமாருக்கும், தீபக் சாஹருக்கும் இடையே போட்டி நிலவும். அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா, ஹர்ஷல் படேல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணியிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

இந்தியா:

ரோகித்சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரிஷப்பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார் அல்லது தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், யசுவேந்திர சாஹல், பும்ரா.

ஆஸ்திரேலியா:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஸ் இங்லீஷ், ஸ்டீவ் சுமித், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஆடம் சம்பா, கம்மின்ஸ், ஹாசல்வுட், சீயான் அபோட்.

Tags:    

Similar News