கிரிக்கெட்
null

3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது போட்டி பாதிக்க வாய்ப்பு

Published On 2023-03-17 05:54 GMT   |   Update On 2023-03-17 07:52 GMT
  • அடுத்த 3 நாட்களில் ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
  • மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக வருகிற 19-ந்தேதி விசாகபட்டினத்தில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

நாளை கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களில் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மாநில முழுவதும் பரவலாக அல்லது ஓரளவு பரவலாக மழை பெய்யும். ஆந்திராவின் ஊட்டி என்றழைக்கப்படும் அரக்கு பள்ளத்தாக்கில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Tags:    

Similar News