அஜிதேஷ், ராஜகோபால் அரை சதம் - மதுரை வெற்றிபெற 212 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெல்லை
- டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 211 ரன்களை குவித்தது.
சேலம்:
7-வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
நேற்று இரவு நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்துள்ளது.
அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஜிதேஷ் குருசாமி 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராஜகோபால் 76 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.