கிரிக்கெட்

இலங்கை தொடரில் இருந்து நீக்கம்: முடிவுக்கு வரும் ஜடேஜாவின் ஒயிட்பால் கிரிக்கெட்

Published On 2024-07-19 09:26 GMT   |   Update On 2024-07-19 10:04 GMT
  • சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை.
  • பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

புதுடெல்லி:

உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.

ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.

அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News