கிரிக்கெட் (Cricket)

லண்டன் சென்றடைந்தது இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - லண்டன் சென்றடைந்தது இந்திய அணி

Published On 2022-06-17 10:21 GMT   |   Update On 2022-06-17 10:21 GMT
  • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார்.
  • ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் லண்டன் செல்கிறார்.

இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் செப்டம்பர் 10-ந் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய இந்திய அணி இன்று லண்டன் சென்றடைந்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் இந்திய அணியில் இணைவார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Tags:    

Similar News