கால்பந்து

இந்திய, அமெரிக்க வீராங்கனைகள்

ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி- இந்திய அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி

Published On 2022-10-11 19:49 GMT   |   Update On 2022-10-11 19:51 GMT
  • ஆரம்பம் முதல் அமெரிக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர்.
  • ஆட்டத்தின் முடிவில் 8-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

புவனேஷ்வர்:

17 வயதுக்கு உட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கி உள்ள இந்த போட்டித் தொடர் 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் துவக்க நாளான நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய மகளிர் கால்பந்து அணி பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதல் தீவிரம் காட்டிய அமெரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மெலினா ரெபிம்பாஸ் பிரே 2 கோல்களை அடித்தார். பதிலுக்கு கோல் போடுவதற்கு இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதிவரை இந்திய அணி கோல் அடிக்காததால் அமெரிக்க ஜூனியர் கால்பந்து அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

Similar News