செய்திகள் (Tamil News)

காவிரி பிரச்சனை- கமல்ஹாசனின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

Published On 2018-05-19 05:46 GMT   |   Update On 2018-05-19 05:49 GMT
சென்னை தியாகராய நகர் தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. #CauveryIssue #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இக்கூட்டம் கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் நோக்கத்தில் கூட்டப்படுகிறது என்றுதெரிவித்தார்.


“நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது.

இதில் கமல்ஹாசன், பா.ம.கா. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், நடிகர் நாசர், ஜமீலா நாசர், நடிகை ஸ்ரீபிரியா, ஏ.கே.மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன், அர்ஜுன் சம்பத், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு பற்றியும், விவசாயிகளுக்கான செயல் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். #CauveryIssue #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News