செய்திகள்

நாகையில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

Published On 2018-06-07 16:58 GMT   |   Update On 2018-06-07 16:58 GMT
நாகூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 550 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகூர் பகுதிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழங்கநல்லூர் பஸ்நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெரியார் தெருவை சேர்ந்த சுப்புவேல் (60) என்பதும், 110 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனைக்காக அவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சுப்புவேலை கைது செய்தனர். இதேபோல் சின்ன கன்னமங்களம் தெற்கு தெருவை சேர்ந்த மூர்த்தி மனைவி தமிழரசி(38) தனது வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில சாராயம் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சாராயம் விற்ற கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் உப்புக்குழி பகுதியை சேர்ந்த கண்ணதாசன்(48), கீழ ஆவராணி மெயின் ரோட்டை சேர்ந்த வள்ளி(53), பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த தங்கபாண்டியன் (35) ஆகியோரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News