செய்திகள்

ஈரோடு பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் வழிப்பறி- கொள்ளையால் மக்கள் கலக்கம்

Published On 2018-07-31 12:30 GMT   |   Update On 2018-07-31 12:30 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் சமீபகாலமாக ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் வீடு முன்பு கோலம் போடும் பெண்கள் இவர்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இதுதவிர பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்து பணத்தை திருடுவது பூட்டிக்கிடக்கும் கடைகள் மேல் கூரைகளை உடைத்து பணம் பொருட்களை திருடுவது என சமீப காலமாக ஈரோடு பகுதியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

மக்கள் அதிகம் நடமாடும் உள்ள பகுதியில் மிகவும் துணிச்சலாக வந்து தங்கள் தங்களது கைவரிசையை காட்டி கொண்டு செல்கின்றனர் இதில் பெரும்பாலான கொள்ளைகளில் இன்னும் துப்புத் துலங்கவில்லை நேற்று கூட சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள அடுத்தடுத்த இரண்டு கடைகளின் மேற்கூரையை பிரித்து ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்

மேலும் அருகிலுள்ள மற்றொரு கடையிலும் கொள்ளையர்கள்புகுந்து கொள்ள அடிக்க முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை கொலை நடந்த இரண்டு கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலும் இதே சூரம்பட்டி நால்ரோடு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது கொள்ளை சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செய்வதில்லை பெரிய பெரிய திருட்டு கொலை வழக்குகளில் சிசிடி கேமரா ஆதாரங்களை வைத்து பல்வேறு சமயங்களில் குற்றவாளியை பிடித்துள்ளோம் பொதுமக்களின் பயத்தைப் போக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வருகிறோம் பொதுமக்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
Tags:    

Similar News