செய்திகள் (Tamil News)

திருச்சியில் பள்ளி நிர்வாகி - ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2018-08-03 11:29 GMT   |   Update On 2018-08-03 11:29 GMT
திருச்சியில் பள்ளி நிர்வாகி - ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

திருச்சி:

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 17-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் திரு முருகன். இவர் சொந்தமாக பள்ளி நடத்தி வருகிறார் .

சம்பவதன்று திருமுருகன் வீட்டை பூட்டி விட்டு, வீட்டின் மாடியில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 1.20 லட்சம் ரொக்க பணம், 46 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டு இருந்தது. இது குறித்து திருமுருகன் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி எடமலைபட்டி புதூர் சாரதிநகரை சேர்ந்தவர் கணேசன். தபால் துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மரக்கடையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

இது குறித்து கணேசன் எடமலைப் பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு சென்றனர்.

இந்த 2 கொள்ளை சம்பவங்களில் மொத்தம் ரூ.18 லட்சம் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News