செய்திகள்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2018-08-22 17:58 GMT   |   Update On 2018-08-22 17:58 GMT
திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனார்.
தொண்டி:

திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சி அருகே உள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மல்லனூர் கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்வரமூர்த்தி தொண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஒரு ஜே.சி.பி. எந்திரம், ஒரு டிராக்டர், ஒரு டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மூப்பையூர் பிரசாத் (வயது 26), ஆண்டிப்பட்டி தாலுகா பிச்சபட்டி பாண்டி(20), சேனவயல் ராமு (40) ஆகியோர் மீது தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிச்சாமி, முத்துவேல் ஆகியோர் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் மல்லனூர் உடையார், மணிமுத்து, எம்.ஆர்.பட்டணம் மகாலிங்கம், கோவிந்தமங்கலம் நாகேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News