செய்திகள் (Tamil News)

நாசரேத் அருகே குளத்தில் படித்துறை கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-27 09:44 GMT   |   Update On 2018-08-27 09:44 GMT
நாசரேத் அருகே பிள்ளையன்மனை குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாசரேத்:

தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேல்கால் வழியாக வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிக்குளம், பிள்ளையன்மனை குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளமடம் பெரியகுளம் நிரம்பி நொச்சிக் குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் நொச்சிக்குளம் நிரம்பி பிள்ளையன் மனை குளத்திற்கு தண்ணீர் வந்துவிடும்.

இந்தநிலையில் பொதுப் பணித்துறை சார்பாக கடந்த ஒரு வாரமாக பிள்ளையன்மனை குளம் ஜே.சி.பி. மூலம் தூர் வாரப்பட்டு வருகிறது. படித்துறை இடிக்கப்பட்டதோடு கரையில் கற்கள் சிமெண்ட் வைத்து பூசாமல் வெறும் கற்களை வைத்து மட்டுமே கரையில் அடைத்து வருகிறார்கள்.

இதனை கண்டித்து பிள்ளையன்மனை வடக்கூர் மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வேண்டும் என்றும், குளத்துக்கரையில் அடைக்கும் பணியை சீராக செய்யவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குளம் தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News