செய்திகள்

குற்றாலம் மலையில் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்ல தடை நீக்கம்

Published On 2018-08-28 12:50 GMT   |   Update On 2018-08-28 12:50 GMT
குற்றாலம் மலையில் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி:

குற்றாலம் மலைப் பகுதியில் உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்கு பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் செண்கபாதேவி அம்மன் கோவிலுக்கு வருகை தருவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவில் செயல் அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் மாவட்ட செயலாளர் குமரேச சீனிவாசன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் எஸ்.வி.அன்புராஜ், குற்றாலம் பா.ஜ.க. தலைவர் செந்தூர்பாண்டியன், தென்காசி பா.ஜ.க. நிர்வாகிகள் கடந்த வாரம் தென்காசி கோட்டாட்சி தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

மனுவினை பரிசீலித்த கலெக்டர் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறை அலுவலகத்தில் ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனவே நேற்று காலை முதல் பா.ஜ.க நிர்வாகிகள் குற்றாலம் செந்தூர் பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், செங்கோட்டை நகர தலைவர் மாரியப்பன், மேலகரம் மகேஷ்வரன், குமார், கணேசன், முருகேசன் ஆகியோர் குற்றாலம் வனத்துறை அலுவலகத்தில் நின்று கொண்டு செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினரின் விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News