செய்திகள்

திருந்தி வாழ்வதாக கூறி கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2018-09-28 09:23 GMT   |   Update On 2018-09-28 09:23 GMT
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.

இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.

1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News