செய்திகள்

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- கமல்ஹாசன் வேண்டுகோள்

Published On 2018-11-04 06:40 GMT   |   Update On 2018-11-04 06:40 GMT
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவ. 7-ந்தேதி வருகிறது.

இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன், பள்ளி மாணவிகள் 2 பேருக்கு படிப்பை தொடர நிதி உதவி வழங்கினார்.


சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.

மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.

மாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News