செய்திகள்

அன்னூரில் பொது இடத்தில் புகை பிடித்த 12 பேருக்கு அபராதம்

Published On 2018-11-30 10:14 GMT   |   Update On 2018-11-30 10:14 GMT
அன்னூரில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது.

அன்னூர்:

சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் அன்னூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து அன்னூரில் உள்ள ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த 15 கடைகளில் இங்கு புகை பிடிக்கக் கூடாது என்ற விளம்பர பலகை இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 15 கடைகளிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 3 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News