செய்திகள்

தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை - அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

Published On 2019-03-10 21:22 GMT   |   Update On 2019-03-10 21:22 GMT
பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #ParliamentElection
சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாளாகும். அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் (19-ந் தேதி) புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

பொதுவாக இதுபோன்று தொடர் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  #ParliamentElection
Tags:    

Similar News