செய்திகள் (Tamil News)
திருவண்ணாமலையில் ராமதாஸ் பேசிய காட்சி.

அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் - ராமதாஸ்

Published On 2019-03-28 06:53 GMT   |   Update On 2019-03-28 06:53 GMT
அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். #LokSabhaElections2019 #ADMK #Ramadoss
ஆரணி:

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூரில் பிரசாரம் செய்தார். ஆரணியில் அவர் பேசியதாவது:-

‘‘சென்னையில் இருந்து கொண்டுதான் அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் நான் மட்டும்தான் கிராம பகுதியில் இருந்துகொண்டு விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு அரசியலையும் நடத்துகிறேன். இதனால் விவசாயிகளின் பிரச்சினைகள் எனக்கு தெரியும்.

எங்கள் கட்சியில் மத்திய மந்திரியாக அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி, அன்புமணி போன்றவர்கள் காலத்தில் ஏராளமான ரெயில்வே துறையில் அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 108 அவசர ஆம்புலனஸ் திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது.

அந்த திட்டங்கள் தொடர இந்த மெகா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் மறந்து கூட எதிரணிக்கு ஓட்டு போடாதீர்கள்’’ என்றார்.

தேர்தல் பிரசாரத்தில் எல்லா கூட்டங்களிலும் மக்களிடையே ஒரு எழுச்சி தெரிகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி உங்களில் ஒருவர். அவரது வெற்றிக்கு இரவு பகலாக பாடுபட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

இந்த மெகா கூட்டணி அமைக்ககாரணம் என்ன வென்றால் இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அமைக்கப்பட்டதாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 500 கடைகளை மூடி, படிப்படியாக கடைகள் மூடப்படும் என்றார். அதை நாங்கள் தற்போது கூறி வருகிறோம். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சாராய ஆலைகளை வைத்து நடத்தி வருகிறார்கள். தி.மு.க. அரசு மக்களுக்கு, தமிழ் வளர்ச்சிக்கு, சமூக நீதிக்கு எதுவும் செய்யவில்லை. வெற்றி நமக்கு உறுதியாகி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #Ramadoss



Tags:    

Similar News