கடலூரில் 24 மணி நேர மகப்பேறு சேவை மையம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
- தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகப்பேறு இறப்பு மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை முற்றிலும் வராமல் தடுக்கும் விதமாக 24 மணி நேர சேவை மையம் கடலூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் வம்சம்கடலூர் என்ற திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா.இராஜேந்திரன், இராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. 24 மணி நேர மகப்பேறு சேவை மையத்திற்கென பிரத்தியோகமாக தொலைபேசி எண்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண்கள் 7598512042, 7598512045 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க உறுப்பினர்களிடம் தங்களது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.