ஆலங்குளம் அருகே லாரியை கடத்திய 3 பேர் கைது-ஜி.பி.எஸ். கருவியால் சிக்கினர்
- லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது.
- முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் கல்குவாரி உள்ளது. குவாரிக்குள் இயங்குவதற்காக புதுப்பட்டியைச் சேர்ந்த மாலதி(வயது 32) என்பவருக்குச் சொந்த மான லாரி இயங்கி வந்தது.
லாரி கடத்தல்
ஆடி அமாவாசையை விடுமுறையை முன்னிட்டு லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர், டிரைவரிடம் கேட்ட போது அவர் தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
3 பேர் கைது
இதையடுத்து மாலதி ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார், முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் லாரியை கடத்தி் சென்ற புதுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(38), பாலமுகேஷ்(34), மதன்(30) ஆகிய 3 பேரை் கைது செய்தனர்.