உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு மற்றும் வழிகாட்டி ைகயேட்டினை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 304 மாணவிகளுக்கு ஏ.டி.எம் கார்டு அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்

Published On 2022-09-05 07:16 GMT   |   Update On 2022-09-05 07:16 GMT
  • புதுமைப்பெண் திட்டம் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முதற்கட்டமாக 304 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம்கார்டு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

திண்டுக்கல்:

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்பாட்டில் இருந்த மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், உயர்கல்வி உறுதிதிட்டமாக புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த திட்டம் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 92,297 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1390 மாணவிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா இன்று ஜி.டி.என் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சமூகநலஅலுவலர் புஷ்பகலா வரவேற்புரையாற்றினார். கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முதற்கட்டமாக 304 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம்கார்டு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி, எம்.எல்.ஏ காந்திராஜன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மேயர் இளமதி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, துைணமேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன்மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், உயர்கல்வியில் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல், பெண்களின் சமூகபொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றிற்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News