உள்ளூர் செய்திகள் (District)

சேலம் அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவரை தாக்கிய சீனியர் மாணவர்கள் 4 பேர் கைது

Published On 2022-11-20 09:04 GMT   |   Update On 2022-11-20 09:04 GMT
  • சேலம் அரசு கலை கல்லூரியில் பி. ஏ 2-ம் ஆண்டு படித்த மாணவன் விக்னேசை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான அஜித் உள்பட பலர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர் .
  • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரண நடத்தி விக்னேசை தாக்கிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம்:

சேலம் திருமலை கிரியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சேலம் அரசு கலை கல்லூரியில் பி. ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் விக்னேசை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான அஜித் உள்பட பலர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர் .

இதில் காயமடைந்த விக்னேஷ் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விக்னேஷின் உறவினர்கள் கடந்த சில மாதங்களாக சீனியர் மாணவர்கள் அவரை ராக்கிங் செய்ததாகவும் தற்போது அதில் ஏற்பட்ட பிரச்சனையில் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் புகார் கூறினார்.

உறவினர்கள் புகார்

மாணவரின் தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அவரது தந்தை பிரிந்து சென்று விட்டார். இதனால் விக்னேஷ் அவரது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். இதை அடுத்து விக்னேஷின் உறவினர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரண நடத்தி விக்னேசை தாக்கிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த போது ஏற்கனவே மாணவருக்கு பலமுறை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததும், தற்போது நடைபெற்ற ரத்ததான முகாமில் அதிக நபரை அழைத்து வந்து விக்னேஷ் ரத்த தானம் செய்ய வைத்ததும் இதனால் ஏற்பட்ட போட்டியில் அவரை சீனியர் மாணவர்கள் தாக்கியதும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News