உள்ளூர் செய்திகள்

தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி ராஜவேல்

விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்த விவசாயி

Published On 2023-03-04 09:14 GMT   |   Update On 2023-03-04 09:14 GMT
  • விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். இவர் தனது இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
  • ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ,அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 1968-ல் 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.   விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது. தனது மனு மீது நடவடிக்கை எடுக்க துணை தாசில்தாரிடம் கோரியுள்ளளார். இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ3 ஆயிரம் பணத்தை ராஜவேல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தான் அளித்த மனு குறித்து ராஜவேல் கேட்டபோது, மேலும் ரூ.3 ஆயிரம் தொகையை கொடுத்தால்தான் பணி நிறைவடையும் என துணை தாசில்தார் கூறியுள்ளார்

இ்ந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் ராஜவேல் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் எனது இடத்தை அளவீடு செய் ல அளவை மேற்கொள்ள அங்கு சென்ற சர்வேயரிடம், சர்வே எடுக்க வேண்டாம் என துணை தாசில்தார் தடுத்து விட்டதாகவும், நத்தம் பட்டா கோரிய மனுவை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் சப் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில் மண்டல துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு நத்தம் பட்டா வழங்க கோரியும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து ராஜவேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த சப் கலெக்டரி்ன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ராஜவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்ட ராஜவேல் அங்கிருந்து சென்றார். இதனால் சார் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News