உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published On 2023-05-08 09:50 GMT   |   Update On 2023-05-08 09:50 GMT
  • வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
  • தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News