உள்ளூர் செய்திகள்

கோவையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2023-10-16 09:33 GMT   |   Update On 2023-10-16 09:33 GMT
  • ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம்
  • ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை,

கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் வரை கடை திறந்திருந்தது. அதன்பிறகு கடையை மூடி விட்டு முருகன் தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

மாலை 6 மணியளவில் ஜவுளிக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறி யுள்ளது. இதனை ஜவுளிக்கடைக்கு மேல் உள்ள கட்டிடத்தில் கடை நடத்தி வரும் இருகூரை சேர்ந்த நவீன் (24) என்பவர் பார்த்தார்.உடனே அவர் ஜவுளி க்கடை உரிமையாளரான முருகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு, தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் கடையை திறந்தபோது, கடைக்குள் தீ பற்றி கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி விட்டன.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில், விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசம் ஆகின.

தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி நிகழ்ந்தது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News